மாங்குளம்
மாங்குளம் (Mankulam) என்பது இலங்கை, யாழ்ப்பாண நெடுஞ்சாலையில் (A-9 நெடுஞ்சாலை) வவுனியாவிற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்த ஊர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி "மாங்குளம் நகரம்" என அழைக்கப்படுகின்றது.
மாங்குளம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
அமைவிடம் | 9°07′47″N 80°26′39″E / 9.129800°N 80.444267°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
"மாங்குளம்" எனும் பெயர், குளத்தின் பெயராகும்.[1] தமிழரின் பெயரிடல் முறைகளின் படி குளத்தின் பெயரே குளத்தின் அண்டிய ஊரின் பெயராகவும் வழங்கிவருவதன் அடிப்படையில், இந்த ஊரின் பெயர் "மாங்குளம்" என வழங்கப்படுகிறது. இந்த ஊர் வரலாற்று ரீதியாக தமிழர் வாழ்ந்த இடமாகும். 2009ம் ஆண்டின் பின்னர் இந்நிலை மாறிவருகிறது. சிங்கள குடியிருப்புகளும் தற்போது அங்கே தோன்றத்தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவிலும், கொழும்பில் இருந்து 180 மைல்கள் தொலைவிலும் உள்ள இது வன்னிப் பகுதியின் புவியியல் மையத்திற்கு அண்மையில் உள்ளதாலும், போதிய அளவு நிலம் உள்ளதாலும், வன்னியிலுள்ள பல நகரங்களுடனும், யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும், தென்னிலங்கையின் முக்கியமான நகரங்களுடனும் இலகுவான போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதாலும், வடமாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உருவாகக்கூடிய வாய்ப்புகள் இவ்விடத்துக்கு உண்டு எனச் சிலர் கருதுகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் எண்பதுகளுக்குப் பின்னர் தீவிரமடைந்த இன முரண்பாடுகளின் காரணமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர்களினால் மிகவும் பாதிப்படைந்த இடங்களுள் இதுவும் ஒன்று.
இப்பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விடுதி அமைந்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக மாங்குளம் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. உள்நாட்டுப் போரினால் பெரிதும் சேதமான மாங்குளம் மகாவித்தியாலயம் நிக்கோட் திட்டத்தின் மூலம் மீளமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.