மாங்கோட்டு பகவதி கோயில்

மாங்கோட்டு பகவதி கோயில் இந்தியாவில், கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் இருந்து ஆலத்தூர் செல்லும் சாலையில் அத்திப்போட்டா என்ற இடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி கோயிலாகும். இக்கோயிலில் உள்ள தேவி மிகவும் உக்கிரமாக உள்ளார்.

முக்கிய நாட்கள் தொகு

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்கள் சிறப்பான நாள்களாகக் கருதப்படுகிறது. [1]கேரள மேடம் (ஏப்ரல்-மே) மாதத்தில், அந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு, ஏழு நாட்கள் இங்கு திருவிழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, பரக்காட்டு பகவதி கோயிலில் பூரம் திருவிழா முடிந்ததும், அந்த பகவதி தனது கோயிலை பூட்டிவிட்டு மீனமாதம் (மார்ச்-ஏப்ரல்) ஏழு நாட்கள் அத்திபோதத்தில் வந்து தங்குவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலையாளப் புத்தாண்டின் தொடக்கமான விஷூவுக்குப் பிறகு (ஏப்ரல் மாதம்) இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விஷூவுக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. திங்கட்கிழமை கரி-காளி நடனத் திருவிழா நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விழா சிறப்பாக நடைபெறும்.

மேலும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. Sree Mangottukadu Devasom
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கோட்டு_பகவதி_கோயில்&oldid=3834436" இலிருந்து மீள்விக்கப்பட்டது