மாண்டு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
மாண்டு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
மாண்டு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ க31 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

வெளியிணைப்புகள்

தொகு
  • Raga Maund - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டு&oldid=2518476" இலிருந்து மீள்விக்கப்பட்டது