மாண்டேக் டிரூட்
மாண்டேக் டிரூட் (Montague Druitt, 15 ஆகஸ்ட், 1857 – டிசம்பர் 1888)[1] முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் லண்டனில் நடைபெற்ற ஜேக் தெ ரைப்பர் கொலையில் ஒரு குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்க இங்கிலாந்துக் குடும்பத்தில் பிறந்தவர். வின்செஸ்டர் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பட்டம் பெற்ற பிறகு, இவர் ஒரு உறைவிடப் பள்ளியில் உதவிப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார், அதே சமயத்தில் சட்டம் பயின்று 1885 ஆம் ஆண்டில் ஒரு பேரறிஞராக தகுதி பெற்றார். ஆசிரியர் வேலை தவிர்த்து அவருக்கு மிகவும் பிடித்தது துடுப்பாட்டம் ஆகும். இவர் லார்ட் ஹாரிஸ் மற்றும் பிரான்சிஸ் லேசி போன்ற பிரபலமான வீரர்களுடன் விளையாடியுள்ளார்.
நவம்பர் 1888 இல், அறியப்படாத காரணங்களுக்காக பள்ளியில் தனது பதவியை இழந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு இவரது உடல் தேம்ஸ் நதியில் மூழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம், தற்கொலை எனக் கண்டறியப்பட்டது, ஜாக் தி ரிப்பர் கொலைகளின் முடிவோடு இவரது மரணமும் ஒத்துப்போனது. இவர் 1890களில் சில குற்றச்செயல்களைச் செய்ததாகவும் அவை 1960களில் வெளிவந்ததாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. அதன் அடிப்படையில் அந்தக் கொலைகளை இவர் செய்திருக்கலாம் என சில பதிப்பகங்கள் தகவல்கள் வெளியிட்டன. . இருப்பினும், அவருக்கு எதிரான சான்றுகள் முற்றிலும் சூழ்நிலை சார்ந்தவைகளாக இருந்தன. ஆனால் 1970 களில் இருந்து பல எழுத்தாளர்கள் அவரை சந்தேக நபர் இல்லை என இதனை நிராகரித்தனர்.
தொழில் வாழ்க்கை
தொகுஆகஸ்ட் 3 இல் போர்ன்மவுத்தில் நடைபெற்ற பர்சீஸ் தீன் பார்க் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஜெண்டில்மேன் போர்ன்மவுத் அணி சார்பாக விளைடாடினார். அதன் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து பாவ்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் துவக்க ஓவர்கள் வீசி இரண்டு இலக்கினைக் இலக்கினைக் கைப்பற்றினார். அதில் ஆறு ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பந்தோல் பந்துவீச்சில் ஆடமிழந்தார். இந்தப் போட்டியில் பர்சேஸ் அணி ஆறு இலக்குகளால் வெற்றி பெற்றது.[2]
1888 இல் செப்டம்பர் 3 இல் பிரதர்ஸ் கிறிஸ்டோபெர்சன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் இவர் பிளாக்ஹீத் அணி சார்பாக விளைடாடினார். அந்தப் போட்டியில் 2 ஓட்டங்கள் எடுத்து கிறிஸ்டோபெர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் துவக்க ஓவர்கள் வீசி மூன்று இலக்கினைக் இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பிளாக்ஹீத் அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[3]
தோர்செட்டில் இவர் கிங்ஸ்டன் துடுப்பாட்ட சங்கத்திற்காகவும்[4], தோர்செட் மாகாணத் துடுப்பாட்ட சங்க அணிக்காகவும் இவர் விளையாடினார்.[5] இவர் குறிப்பாக பந்துவீச்சினால் கவனம் பெற்றார்.[6][7] 1882 ஆம் ஆண்டில் இவர் சார்ந்த ஜென்டில்மேன்ஸ் அணி மேற்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அவர்களின் அணி இன்காக்னிட்டி என அழைக்கப்பட்டது.[8] சூன் 14, 1883 இல் பட்டர்பிளயர்ஸ் எனும் அணி சார்பாகவும் விளையாடினார். அந்த அண்யில் முதல் தரத் துடுப்பாட்ட வீரர்களான ஏ. ஜே. வெப், ஜே. ஜி. கிரவுடி, ஜான் பிரடரிக் மற்றும் சார்லஸ் சைமர் ஆகியோர் விளையாடினர்.[9]
சான்றுகள்
தொகு- ↑ His body was discovered on 31 December 1888 about a month after his death. A train ticket dated 1 December was found in his pocket. His gravestone reads 4 December 1888; his death certificate gives the date his body was found. According to the probate records of his estate, he was last seen alive on 3 December (McDonald, p. 143).
- ↑ "தேர்வு போட்டி".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஒருநாள் போட்டி".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Dorset County Chronicle and Somersetshire Gazette, 10 January 1889, quoted in Evans and Skinner, p. 590; Leighton, pp. 47, 56
- ↑ Leighton, p. 56; McDonald, p. 82
- ↑ Leighton, pp. 18, 42
- ↑ "A Brief History பரணிடப்பட்டது 7 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்", Blackheath Cricket Club, retrieved 26 November 2011
- ↑ Leighton, p. 57; McDonald, p. 83
- ↑ Leighton, pp. 55, 177