மாண்ட்ராய்டைட்டு

பாதரசக் கனிமம்

மாண்ட்ராய்டைட்டு (Montroydite) என்பது HgO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாதரசத்தின் பாதரச(II) ஆக்சைடு கனிம வடிவமாகும். இது ஓர் அரிய பாதரச கனிமமாகும். அமெரிக்காவின் டெக்சசு மாநிலம் பிரீவுசுடர் மாகாணத்தின் தெர்லிங்குவா சுரங்க மாவட்டத்தில் முதன் முதலாக மாண்ட்ராய்டைட்டு கண்டறியப்பட்டது. சுரங்கத்தின் உரிமையாளராக இருந்த மான்ட்ராய்டு சார்ப்பு நினைவாக கனிமத்திற்கு மாண்ட்ராய்டைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

மாண்ட்ராய்டைட்டு
Montroydite
வெள்ளை கால்சைட்டு அணிக்கோவையில் அடர் சிவப்பு மாண்ட்ராய்டைட்டு மற்றும் ஆரஞ்சு கிளீனைட்டின் இழை.
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுHgO
இனங்காணல்
நிறம்ஆழ்ந்த சிவப்பு, பழுப்புச் சிவப்பு முதல் பழுப்பு வரை
படிக இயல்புநீள்பட்டகம், அரிதாக தட்டை வடிவம்; வரித்திரள்; பெரிய புழுப்போன்ற கொத்துகள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புசரிபிளவு {010}
விகுவுத் தன்மைவெட்டுபடும்
மோவின் அளவுகோல் வலிமை1.5 - 2.0
மிளிர்வுதுணை வைரக் கனிமம், கண்ணாடிப் பளபளப்பு,
கீற்றுவண்ணம்மஞ்சள் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்ரும் ஒளி கசியும்
ஒப்படர்த்தி11.23
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 2.370 nβ = 2.500 nγ = 2.650
இரட்டை ஒளிவிலகல்δ = 0.280
பலதிசை வண்ணப்படிகமைஆழ் சிவப்பு-ஆரஞ்சு முதம் மஞ்சள் பழுப்பு வரை (தடித்த பிரிவுகளில் தெரியும்)
2V கோணம்பெரியது
மேற்கோள்கள்[1][2]

நீர்வெப்பப் பகுதி பாதரச படிவுகளில் மாண்ட்ராய்டைட்டு காணப்படுகிறது. இதனுடன் சேர்ந்து காணப்படும் தாதுக்களாக தாயக பாதரசம், சின்னபார், மெட்டா சின்னபார், கேலோமெல், எக்லெசுடோனைட்டு, தெர்லிங்குவைட்டு, மோசசைட்டு, கிளீனைட்டு, எட்கர்பைலைட்டு, இயிப்சம், கால்சைட்டு மற்றும் டோலமைட்டு போன்ற கனிமங்கள் அறியப்படுகின்றன்றன..[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat.org
  2. 2.0 2.1 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2022-07-02. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்ட்ராய்டைட்டு&oldid=4120611" இலிருந்து மீள்விக்கப்பட்டது