மாதங்கள் (விசித்திரக் கதை)
மாதங்கள் - தி மந்த்ஸ் என்பது ஒரு இத்தாலிய இலக்கிய விசித்திரக் கதையாகும், இதை கியாம்பட்டிஸ்டா பாசில் தனது 1634 ஆம் ஆண்டு படைப்பான பென்டமெரோனில் எழுதினார்.
சுருக்கம்
தொகுசியானே மற்றும் லிசே சகோதரர்களில் சியானெ பணக்காரர் மற்றும் லிசே ஏழை. லிசே உலகத்தைச் சுற்ற புறப்பட்டார். அவர் ஒரு சத்திரத்தில் பன்னிரண்டு இளைஞர்களைச் சந்தித்தார். அவர்கள் அவரை வரவேற்று, மாதங்களைப் பற்றி அவரிடம் கேட்டனர். அவை ஒவ்வொருவருக்கும் இடமும் நோக்கமும் இருப்பதாகவும், அவற்றை மறுசீரமைக்க விரும்புவது மக்களின் திமிர் என்றும் லிசே கூறினார். மார்ச் மாதமான ஒரு இளைஞன் அது மிகவும் சுமையாக இருப்பதாக ஒருவர் அவரிடம் கூறினான்; அது வசந்த காலத்தை முன்னெடுத்தது என்று அவர் பதிலளித்தார். மார்கழி மாதமான அந்த இளைஞன், அவனிடம் ஆசைகளை நிறைவேற்றும் கலசத்தை கொடுத்தான். அதன் மூலம், அவர் வீட்டிற்கு எளிதாக பயணம் செய்தார். மேலும் செழிப்பானவராக ஆனார்.
அவரது சகோதரர் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டார். மேலும் லிசே சத்திரம் மற்றும் பன்னிரண்டு இளைஞர்களைப் பற்றி அவரிடம் கூறினார். ஆனால் அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பது பற்றி கூறவில்லை. சியானே அங்கு சென்று ஒரு சாட்டையைப் பெற்றார். அவர் அதைப் பயன்படுத்த முயன்றபோது, அவரது சகோதரர் வரும் வரை அது அவரைத் தாக்கியது. அதைத் தடுக்க கலசத்தைப் பயன்படுத்தினார். பின்னர் லிசே தனது அதிர்ஷ்டத்தை சியானேவுடன் பகிர்ந்து கொண்டார்.
வர்ணனை
தொகுஇந்தக் கதை ஒரு பொதுவான வடிவத்தைப் பின்பற்றுகிறது. ஒரு உடன்பிறந்தவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதரிடம் கண்ணியமாக நடந்துகொண்டு பரிசுகளைப் பெறுகிறார். இரண்டாவது உடன்பிறந்தவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு தண்டனையைப் பெறுகிறார். ஆனால் இதுபோன்ற பெரும்பாலான கதைகளில் ("வைரங்கள் மற்றும் தேரைகள் ", " அம்மா ஹல்டா ", " தி திரீ " ஹெட்ஸ் இன் தி வெல் ", " ஃபாதர் ஃப்ரோஸ்ட் ", அல்லது " தி டூ கேஸ்கெட்ஸ் ") உடன்பிறந்தவர்கள்கள் - கருணையுள்ள சகோத்ரிகள் மற்றும் கருணையற்ற சகோதரிகள் என்ற ஆர்னே-தாம்சன் வகை 480ற்குக் கீழ் வருகிறார்கள்.
மேலும் பார்க்க
தொகு</img> குழந்தைகள் இலக்கிய போர்டல்
வெளி இணைப்புகள்
தொகு- மாதங்கள் பரணிடப்பட்டது 2020-01-24 at the வந்தவழி இயந்திரம்