மாதவ பிரசாத் பிர்லா
மாதவ் பிரசாத் பிர்லா (Madhav Prasad Birla) (1918-1990) இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் இந்திய தொழில்முனைவோர் ஆவார். தொண்டுக் காரியங்களுக்காக இவர் அறியப்படுகிறார். மேலும் எம்.பி. பிர்லா குழுமத்தின் நிறுவனருமாவார்.
மாதவ பிரசாத் பிர்லா | |
---|---|
பிறப்பு | சூலை 4, 1918 |
இறப்பு | சூலை 30, 1990 கொல்கத்தா | (அகவை 72)
சுயசரிதை
தொகுமாதவ் பிரசாத் மும்பையில் 1918 சூலை 4 அன்று பிறந்தார். திருமதி. பிரியம்வதா தேவி என்பவரை மணந்தார்.. பிர்லா கார்ப், [1] யுனிவர்சல் கேபிள்ஸ், விந்தியா தொலைத் தொடர்பு, இந்துஸ்தான் இரசாயனங்கள், திக்விஜய் கம்பளி ஆலைகள், இந்தியன் ஸ்மெல்டிங் போன்ற பல நிறுவனங்களை இவர் அமைத்திருந்தார். இவர் பிர்லா கோளரங்கத்தையும், [2] பெல்லி வ்யூ மருத்துவமனை, பிரியம்வதா பிர்லா அரவிந்த் கண் மருத்துவமனை, கொல்கத்தாவில் பல பள்ளிகள் போன்றவற்றையும் நிறுவினார். மும்பை மருத்துவமனை அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் 1990 சூலை 30அன்று கொல்கத்தாவில் காலமானார்.
மேலும் காண்க
தொகு- பிர்லா குடும்பம்
- எம்.பி. பிர்லா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளி