மாதாரி (Madhari) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர்.

மாதாரி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு, கன்னடம்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அருந்ததியர்

இச்சமூகத்தினர் அருந்ததியர் சமூகத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். தமிழகத்தில் மாதாரிகள் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.

சொற்பிறப்பு

தொகு

ஆந்திராவில் மாதிகா என்று ஓர் இனம் உண்டு . அந்த இனம் தமிழகத்திற்கு வந்தபோது மாதிகா என்ற சொல்லானது மருவி மாதாரி என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.[1]

மாதாரி உட்பிரிவுகள்

தொகு

தெலுங்கு பேசும் மாதாரிகள் தாங்களை கொல்ல மாதாரி , தொட்டிய மாதாரி, வடுக மாதாரி என்றும் கன்னடம் பேசும் மாதாரிகள் தங்களை அனுப்ப மாதாரி , மொரசுமாதாரி என்றும் அழைத்துக்கொள்கின்றனர். கொங்கு மாதாரிகள் மட்டும் தமிழ் பேசுபவர்கள் . இவர்களைப்பற்றிய ஆதாரங்கள் மிகவும் குறைவாகும்.[2]

தொழில்

தொகு

இச்சமூகத்தினர் பொதுவாக தோல் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
    • மாற்கு, ed. (2001). அருந்ததியர், வாழும் வரலாறு. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி. p. 14. ஆந்திராவில் மாதிகா என்று ஓர் இனம் உண்டு . அந்த இனம் தமிழகத்திற்கு வந்தபோது மாதிகா என்ற சொல்லானது மாதாரி என்று மருவி அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
    • ‎B. S. Baliga, R. Sinnakani, ed. (2007). GAZETTEERS OF INDIA Tamil Nadu State: Thoothukudi District, Volume 1. Director of Stationery and Print. p. 263. There is a belief that the Telugu term Madika has changed into Mathari .
    • Sundararaj Manickam, ed. (1977). The Social Setting of Christian Conversion in South India. Steiner. p. 31. The Telugu - speaking Madhari sub - castes are the Thottiyar , Kollan , Koyyan and Retti and the Kannada - speaking Madhari sub - castes are the Morasar and Anuppa.
    • A. Bopegamage, P.V. Veeraraghavan, ed. (1967). Status Images in Changing India. Manaktalas. p. 122. The Madari , Adi Dravida , Pannadi , Arunthathiyar and Devendra belonged to the scheduled castes or Harijans . Sub- groups among the Madaris consisted of Kundadathan , Konga and Thottiyar .
    • கிருஷ்ணசாமி , ப, ed. (1998). கொங்குநாட்டு வரலாறும் அண்ணன்மார் வழிபாடும். தன்னனானே பதிப்பகம் , பெங்களூர். p. 34. கொங்கு மாதாரிகள் இவர்களில் ஐந்து வகை உண்டு . அனுப்ப மாதாரி , மொரசுமாதாரி , வடுக மாதாரி , தொட்டிய மாதாரி , கொங்குமாதாரி என்னும் இவர்களில் கொங்கு மாதாரிகள் மட்டும் மட்டும் தமிழ் பேசுபவர்கள் . இவர்களைப்பற்றிய ஆதாரங்கள் மிகவும் குறைவு கரூரிலிருந்து காங்கயம் வந்து குடியேறியதாக ஒரு வரலாறு உண்டு.உழவுத்தொழிலில் வேளாளருக்கு உதவுவதும் , திருமணசமயத்தில் மணமக்களுக்கு பாத அணி செய்து கொடுப்பதும் இவர்கள் பொறுப்பு.
    • "Glossary of Caste Names, Tiruchirappalli - Census 1951". Census of India, 1951 (Superintendent Government Press, Madras, 1953). 1951. p. 2 & 5. https://censusindia.gov.in/nada/index.php/catalog/30641/download/33822/21149_1951_TIR.pdf. "அனுப்ப மாதாரி, கொல்ல மாதாரி" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதாரி&oldid=3682659" இலிருந்து மீள்விக்கப்பட்டது