மாதுரி சக்சேனா

இந்தியத் தடகள வீராங்கனை

மாதுரி சக்சேனா (Madhuri Saxena) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இவர் இந்தியாவின் சார்பாக விளையாடுகிறார். மாதுரி சக்சேனாவின் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.[1] 2002 ஆம் ஆண்டு தென் கொரியாவின் பூசான் நகரத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை [2] வென்றார். 2003 ஆம் ஆண்டு மணிலாவில் நடந்த ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 1500 மீ ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். [3] இவரது மகள் அர்மிலன் பெயின்சும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுரி சக்சேனா
Madhuri Saxena
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு15 பிப்ரவரி 1971
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)800 மீட்டர் & 1500 மீட்டர்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)800 மீட்டர் – 2:02.55 (2004)
1500 மீட்டர் – 4:14.78 (2002)
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2002 பூசன் பெண்கள் 800 மீட்டர்
ஆசிய தடகள வெற்றியாளர் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2003 மணிலா பெண்கள் 1500 மீட்டர்

மேற்கோள்கள் தொகு

  1. "Arjuna Award List" (PDF).
  2. "Asian Games, women's 1500m: 'Chena Toast' sweet from Lucknow awaits Harmilan Kaur Bains as the parents, international athletes themselves, await her return".
  3. "Asian athletics tourney: Madhuri, Neelam win silver". https://timesofindia.indiatimes.com/asian-athletics-tourney-madhuri-neelam-win-silver/articleshow/193937.cms. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி_சக்சேனா&oldid=3844358" இலிருந்து மீள்விக்கப்பட்டது