மாதே வேதகுமாரி
மாதே வேதகுமாரி (ஆங்கிலம்: Mothey Vedakumari; தெலுங்கு: మోతే వేదకుమారి) என்பவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார்.[1] இவர் பாடகரும் ஆவார்.
மாதே வேதகுமாரி Mothey Vedakumari | |
---|---|
మోతే వేదకుమారి | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957–1962 | |
பின்னவர் | வி. விமலா தேவி |
தொகுதி | ஏலூரு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 செப்டம்பர் 1931 ஏலூரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
வேதகுமாரி 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் பிறந்தார். இவரது தந்தை மோதே நாராயண ராவ்.
ஏலூரில் மாணவர் காங்கிரசு செயலாளராக வேதகுமாரி இருந்தார். அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் மேற்கு கோதாவரி கிளை செயலாளராக பணியாற்றினார். பெண்களுக்கு இந்தி, தையல், தட்டச்சு போன்றவற்றில் இலவசப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
அனைத்திந்திய வானொலியால் முதல்தரக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்ட இவர், தொடர்ந்து கர்நாடக இசையில் பாடிவருகிறார்.
இவர் 1957-ல் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக எலூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் இரண்டாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biodata of Vedakumari Mothey at Parliament of India". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013.