மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம்

மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம் (Mayor Radhakrishnan Stadium) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள ஒரு வளைதடிப் பந்தாட்ட மைதானமாகும். இது சென்னை மாநகர மேனாள் தந்தை ம. இராதாகிருஷ்ணன் நினைவாகப் பெயரிடப்பட்டது. இங்கு 1996ஆம் ஆண்டு ஆண்கள் வாகையாளர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றது. மேலும் திசம்பர் 2005-ல் போட்டியை மீண்டும் நடத்தியது. ஆசிய வளைதடி பந்தாட்ட வாகையாளர் போட்டி இடமாக 2007ஆம் ஆண்டும் இங்கு நடைபெற்றது. இதில் இந்தியா தென் கொரியாவை 7-2 என்ற வித்தியாசத்தில் வென்றது. இது சென்னை வளைத்தடி பந்தாட்ட சங்கத்தின் அனைத்து பிரிவு போட்டிகளுக்கும் மற்றும் உலக தொடர் வளைதடிப் பந்தாட்ட அணியான சென்னை சிறுத்தைகளின் சொந்த மைதானமாகவும் உள்ளது.[1]

மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம்
Mayor Radhakrishnan Hockey Stadium
முழுமையான பெயர்Mayor Radhakrishnan Stadium
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆட்கூற்றுகள்13°04′32″N 80°15′45″E / 13.0756°N 80.2626°E / 13.0756; 80.2626
பொது போக்குவரத்துமாநகரப் போக்குவரத்துக் கழகம்
உரிமையாளர்விளையாட்டு மேம்பாட்டு முகமை, தமிழ்நாடு
இருக்கை எண்ணிக்கை8,670
தரைப் பரப்புசெயற்கை இழை
கட்டுமானம்
கட்டப்பட்டது1995
சீரமைக்கப்பட்டது2005
கட்டுமான செலவு50cro
குடியிருப்போர்
சென்னை சிறுத்தைகள் (2012)

முக்கிய பன்னாட்டு நிகழ்வுகள்

தொகு

1996 ஆண்கள் வளைதடி பந்தாட்ட வாகையாளர் போட்டி

தொகு

1996 ஆண்கள் வளைதடி பந்தாட்ட வாகையாளர் போட்டி திசம்பர் 7 முதல் 15 வரை, 1996ஆம் ஆண்டு இந்தியாவில் சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் நடந்தது. இந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிந்தைய போட்டியில் பங்கேற்ற நாடுகள்: ஆத்திரேலியா, செருமனி, இந்தியா, நெதர்லாந்து, பாக்கித்தான் மற்றும் ஸ்பெயின்.

2005 வளைத்தடி பந்தாட்ட வாகையாளர் போட்டி

தொகு

2005 ஆண்கள் வளைதடி பந்தாட்ட வாகையாளர் போட்டி என்பது ஆண்களுக்கான வளைதடி பந்தாட்ட வாகையாளர் போட்டியின் 27வது போட்டியாகும். இது 2005ஆம் ஆண்டு திசம்பர் 10 முதல் 18 வரை இந்தியாவில் சென்னையில் நடைபெற்றது.

2007 ஆண்கள் ஆசியக் கோப்பை வளைதடி பந்தாட்ட போட்டி

தொகு

2007 ஆடவர் வளைதடி பந்தாட்ட ஆசியக் கோப்பை ஆண்களுக்கான போட்டி ஆசியக் கோப்பையின் ஏழாவது போட்டியாகும். இது 31 ஆகத்து முதல் 9 செப்டம்பர் 2007 வரை இந்தியாவில் சென்னையில் நடைபெற்றது. இந்தியா தங்கமும், கொரியா வெள்ளியும், மலேசியா வெண்கலமும் வென்றன.

2023 ஆண்கள் ஆசியக் கோப்பை வளைதடி பந்தாட்ட போட்டி

தொகு

2023ஆம் ஆண்டிற்கான ஆடவர் வளைதடி பந்தாட்ட ஆசியக் கோப்பை போட்டி ஆசியக் கோப்பையின் ஏழாவது போட்டியாகும். இது ஆகத்து 3 முதல் 12ஆம் தேதி வரை இங்கு நடைபெற்றது. இந்தியா தங்கமும், மலேசியா வெள்ளியும், யப்பான் வெண்கலமும் வென்றன. இப்போட்டியில் பங்கேற்ற பிற நாடுகள் சீனா, பாக்கித்தான், தென்கொரியா ஆகும்.

முக்கிய உள்நாட்டு நிகழ்வுகள்

தொகு
  1. அகில இந்திய எம். சி. சி. முருகப்பா தங்கக் கோப்பை வளைதடிப் பந்தாட்ட போட்டி, சென்னை [2]
  2. 2012 உலக தொடர் வளைதடிப் பந்தாட்ட போட்டி,

புதுப்பித்தல்

தொகு

2004ஆம் ஆண்டு, திசம்பரில் 2005 வாகையாளர் போட்டியினை நடத்துவதற்கான இடத்தை தயார் செய்வதற்காகத் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் இந்த மைதானம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டது. மறுசீரமைப்பு இயக்கத்திற்குப் பிறகு, அரங்கம் மீண்டும் அமைக்கப்பட்ட செயற்கை மேற்பரப்பு மற்றும் பன்னாட்டுத் தரத்தில் ஒளி விளக்குகள் வசதி ஏற்படுத்தப்பட்டன்.

2023ஆம் ஆண்டு ஏழாவது ஆசியக் கோப்பை வளைதடி பந்தாட்டப்போட்டி 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுவதையொட்டி இம்மைதானத்தில் புதிய செயற்கை இழை மைதானமும் பார்வையாளர் மாடமும் தமிழ்நாடு அரசினால் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "World Series Hockey". www.indianexpress.com. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
  2. "Murugappa Group | Murugappa Gold Cup Hockey Tournament". Archived from the original on 27 July 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  3. https://tamil.oneindia.com/news/chennai/stalin-inaugurated-the-reconstructed-hockey-ground-at-the-radhakrishnan-stadium-in-chennai-524963.html?story=1