வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர் (World Series Hockey , WSH) இந்தியாவில் நடத்தப்படும் தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட கூட்டிணைவு போட்டியாகும். இதனை இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பும் நிம்பசு இசுபோர்ட்சும் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவில் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆர்வத்தை தூண்டுவதே இதன் குறிக்கோளாகும். உரிமை வழங்கப்பட்ட எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய தேசிய அணியிலிருந்தும் வெளிநாட்டு அணிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் இந்த அணிகளில் விளையாடுகின்றனர். பன்னாட்டு வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பில் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியாவின் டென்னிசு மெரெடித் இதன் தொழினுட்ப இயக்குநராக உள்ளார்.[1] இந்தப் போட்டிக்கு தற்போது வட்டகை தயாரிப்பாளர்களான பிரிட்ச்சுச்டோன் புரவணைப்பைத் தருவதால் இந்தப் போட்டி அலுவல்முறையில் பிரிட்ச்சுச்டோன் வளைதடிப்பந்தாட்ட உலகத் தொடர் என்றழைக்கப்படுகின்றது.[2]
The logo of the World Series Hockey | |
நாடுகள் | இந்தியா |
---|---|
நிர்வாகம் | ஆக்கி இந்தியா |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
நிறுவப்பட்டது | 2011 |
போட்டி வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி & ஒற்றை வெளியேற்றப் போட்டி |
முதல் போட்டி | 2012 |
அடுத்த போட்டி | 2012–13 |
அணிகளின் எண்ணிக்கை | உரிமை வழங்கப்பட்ட 8 அணிகள் |
தற்போதைய வெற்றியாளர் | சேர்-இ-பஞ்சாப் (முதல் கோப்பை) |
மிகவும் வெற்றிபெற்றவர் | சேர்-இ-பஞ்சாப் (முதல் கோப்பை) |
மிகுந்த கோல்கள் | குர்ஜிந்தர் சிங் (சண்டிகர் காமெட்சு) (19) சையது இம்ரான் வார்சி (சென்னை சீட்டாசு) (19) |
தொலைக்காட்சி பங்காளி(கள்) | நியோ இசுபோர்ட்சு பிராட்கேசுட்டு பி.லிட். |
வலைத்தளம் | அலுவல்முறை வலைத்தளம் அலுவல்முறை முகநூல் பக்கம் அலுவல்முறை துவிட்டர் கணக்கு அலுவல்முறை யூடியூப் அலைவரிசை |
2012–13 |
2012ஆம் ஆண்டு நடந்த துவக்கப் போட்டியில் சேர்-இ-பஞ்சாப் கோப்பையை வென்றது; இறுதியாட்டத்தில் பஞ்சாப் அணி புனே இசுட்ரைக்கர்சு அணியை 5-2 கோல்கணக்கில் வென்றது. கூகுளிலும் யூடியூப்பிலும் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் நேரடி ஒளிப்பாய்ச்சிய (live stream) முதல் வளைதடிப் பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது.[3] இதன் இரண்டாம் பருவம் திசம்பர் 15, 2012 முதல் சனவரி 20, 2013 வரை நடந்தது.[4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ S. Thyagarajan (30 August 2011). "Dennis Meredith is WSH Technical Director". Chennai, India: தி இந்து. http://www.thehindu.com/sport/hockey/article2411799.ece. பார்த்த நாள்: 12 December 2011.
- ↑ "Bridgestone bags title sponsorship rights for WSH". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/auto/tyres/bridgestone-bags-title-sponsorship-rights-for-wsh/articleshow/11981762.cms.
- ↑ S. Thyagarajan (27 March 2012). "World Series Hockey matches available on YouTube". Mumbai, India: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/sports/hockey/world-series-hockey/World-Series-Hockey-matches-available-on-YouTube/articleshow/12432369.cms. பார்த்த நாள்: 27 March 2012.
- ↑ "World Series Hockey season 2 from December 15". என்டிடிவி. 7 September 2012 இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130130003626/http://sports.ndtv.com/othersports/hockey/item/196173-world-series-hockey-season-2-from-december-15. பார்த்த நாள்: 6 September 2012.