மானவ்கத் அருவி

மானவ்கத் அருவி என்பது மானவ்கத் ஆற்றின் ஒரு பகுதியாக உள்ள அருவியாகும். இது துருக்கியில், மானவ்கத் நகரத்தின் வடக்கில் 3 கிமீ (2 மைல்) தொலைவில் உள்ள சைடு என்ற நகருக்கருகே அமைந்துள்ள அருவியாகும். இந்த அருவியானது குறைந்த உயரத்திலிருந்து விழுவதால் பரந்த பகுதியில் அதன் அதிக பாய்ச்சலை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதே சிறந்தது.[1]

மானவ்கத் அருவி
மானவ்கத் அருவி is located in துருக்கி
மானவ்கத் அருவி
Map
அமைவிடம்சைடு, துருக்கி, மானவ்கத், துருக்கி
ஆள்கூறு36°48′49″N 31°27′16″E / 36.81361°N 31.45444°E / 36.81361; 31.45444
வகைஅருவி
மானவ்கத் அருவி.

மானவ்கத் அருவியின் வெண் நுரை நீர் பாறைகளின் மீது சக்திவாய்ந்த முறையில் பாய்கிறது. அருவி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, அவை ஒரு இனிமையான ஓய்விடத்தை வழங்குகின்றன.[2]

ஒய்மபினார் அணை ஆற்றின் வடக்கே 12 கிமீ (7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[3]

வெள்ளத்தின் போது, மானவ்கத் அருவி அதிக அளவிலான நீரில் காட்சிக்குக் கிடைக்காமல் போவதும் உண்டு.[4]

5 லிரா பணத்தாளின் பின்புறத்தில் (1968-1983)

இந்த அருவியானது 1968-1983 காலகட்டத்தில் துருக்கிய 5 லிரா பணத்தாள்களின் பின்புறத்தில் படமாகச் சித்தரிக்கப்பட்டது.[5]

மானவ்கத் அருவி.

மேற்கோள்கள்

தொகு
  1. "Manavgat Waterfall". பார்க்கப்பட்ட நாள் 2006-10-30.
  2. "Altinkaya, Manavgat and Side". பார்க்கப்பட்ட நாள் 2006-10-30.
  3. "Oymapinar Dam". Archived from the original on 2006-11-14. பார்க்கப்பட்ட நாள் 2006-11-19.
  4. "AmerasianWorld.com's Manavgat, Turkey". Kevin Miller, Jr. Archived from the original on 2007-06-07. பார்க்கப்பட்ட நாள் 2007-07-07.
  5. Central Bank of the Republic of Turkey பரணிடப்பட்டது 2009-06-03 at WebCite. Banknote Museum: 6. Emission Group - Five Turkish Lira - I. Series பரணிடப்பட்டது 2009-04-18 at the வந்தவழி இயந்திரம் & II. Series பரணிடப்பட்டது 2009-02-04 at the வந்தவழி இயந்திரம். – Retrieved on 20 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானவ்கத்_அருவி&oldid=4178680" இலிருந்து மீள்விக்கப்பட்டது