மானிப்பாய் இந்துக் கல்லூரி

மானிப்பாய் இந்துக் கல்லூரி (Manipay Hindu College) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும்.

Manipay Hindu College
மானிப்பாய் இந்துக் கல்லூரி
MHCLOGO.gif
முகவரி
சங்கரப்பிள்ளை வீதி
மானிப்பாய், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°42′53.10″N 79°59′44.40″E / 9.7147500°N 79.9956667°E / 9.7147500; 79.9956667ஆள்கூறுகள்: 9°42′53.10″N 79°59′44.40″E / 9.7147500°N 79.9956667°E / 9.7147500; 79.9956667
தகவல்
வகைபொதுப் பாடசாலை 1AB
குறிக்கோள்For God and Country
(கடவுளுக்காகவும் நாட்டுக்காகவும்)
நிறுவல்சூலை 4, 1910 (1910-07-04)
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1012020
ஆசிரியர் குழு33
தரங்கள்1-13
பால்ஆண்கள்
வயது வீச்சு5-18
மொழிதமிழ்
School roll914
இணையம்

வரலாறுதொகு

1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார்.[1]

பின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 சூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும், வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983ல் 3 மாடி கட்டிடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன.

அதிபர்கள்தொகு

 • 1910 - எஸ். வீரசுவாமிப்பிள்ளை
 • 1911 - பி. சபாபதிப்பிள்ளை
 • 1913 - ஜி. சிவராவ்
 • 1915 - ரி. பி. ஹட்சன்
 • 1916 - எம். சபாரத்னசிங்கி
 • 1917 - டி. எச். ச்ரோச்செட்டே
 • 1920 - எஸ். சிவபாதசுந்தரம்
 • 1921 - பண்டிதர் வி. மயில்வாகனம் (சுவாமி விபுலானந்தர்[1]
 • 1922 - வி. வீரசிங்கம்[1]
 • 1951 - சி. நவரத்தினம்
 • 1956 - கே. முத்துவேல்பிள்ளை[1]
 • 1972 - எம். பேரயிரவர்[1]
 • 1979 - எஸ். ரி. சாரி[1]
 • 1983 - எஸ். வி. மகேசவேலு
 • 1990 - சி. கேசவராஜன்[1]
 • 1999 - சண்முகநாதன்
 • 2004 - கே. ஜெகநாதன்
 • 2005 - 2015: எஸ். சிவனேஸ்வரன்[1]

ஆசிரியர்கள்தொகு

இங்கு கல்வி கற்றவர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Dr. A. Ramanathan (4 சூலை 2010). "Manipay Hindu College, the guiding light". சண்டே ஒப்சேர்வர். 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)