மான்டெர்ரே, கலிபோர்னியா
மான்டெர்ரே நகரம் (City of Monterey) கலிபோர்னியா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைதிப் பெருங்கடலோரத்தில் மான்டெர்ரே வளைகுடாவின் தென் முனையில் அதே பெயருள்ள கவுண்டியில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலருந்து 26 அடி (8 மீ) உயரத்தில் 8.47 ச.மைல் (21.9 ச.கிமீ) பரப்பளவில் அமைந்துள்ளது.,[2] 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 27,810 ஆகும்.
மான்டெர்ரே நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): உலகின் மொழித் தலைநகரம், கலிபோர்னியாவின் "முதல்" நகரம் | |
மான்டெர்ரேயின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
கவுண்ட்டி | மான்டெர்ரே |
அரசு | |
• வகை | நகர்மன்றம்-மேலாளர் |
• நகரமன்றம் | மேயர் சுக்கு டெல்லா சலா எலிசபெத் “லிப்பி” டௌனி ஆலன் ஹாஃபா துணைமேயர் நான்சி செல்பிரிட்ஜ் பிராங்க் சொல்சிட்டோ |
• நகர மேலாளர் | பிரெட் மியூரர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.764 sq mi (30.469 km2) |
• நிலம் | 8.466 sq mi (21.927 km2) |
• நீர் | 3.298 sq mi (8.542 km2) 28.03% |
ஏற்றம் | 26 ft (8 m) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 27,810 |
• அடர்த்தி | 2,400/sq mi (910/km2) |
நேர வலயம் | ஒசநே−8 (பசிபிக் நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (PDT) |
அஞ்சல் குறியீடுகள் | 93940-93944 |
இடக் குறியீடு | 831 |
இணையதளம் | http://www.monterey.org/ |
மான்டெர்ரே 1777ஆம் ஆண்டிலிருந்து 1846 வரை ஆல்ட்டா கலிபோர்னியாவின் தலைநகரமாக எசுப்பானியா மற்றும் மெக்சிக்கோவின் ஆளுகையில் இருந்தது. கலிபோர்னியாவின் சுங்கம் கொண்ட ஒரே துறைமுகமாக விளங்கியது. 1846இல் சுங்கத்துறைக் கட்டிடம் மீது அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டு கலிபோர்னியாவின் மீது ஐக்கிய அமெரிக்கா உரிமை கோரியது. கலிபோர்னியாவில் இந்த நகரத்தில்தான் முதல் நாடகமன்றம், பொதுக் கட்டிடம், பொது நூலகம்,பொதுத்துறைப் பள்ளி, அச்சிடும் கூடம், செய்தித்தாள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.19வது நூற்றாண்டு முதல் இந்நகரம் பல கலைஞர்களை ஈர்த்து வருகிறது. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ஓவியர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.1950கள் வரை மீன்பிடித்தலும் முதன்மையாக இருந்தது.
இங்குள்ள மான்டெர்ரே வளைகுடா மீன் காட்சிக்கூடம், கேன்னரி ரோ, மீனவர் துறைமுகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். ஆண்டுதோறும் நடத்தப்பெறும் மான்டெர்ரே ஜாசு இசைவிழாவும் பல வருகையாளர்களை ஈர்க்கின்றது.
மேற்சான்றுகள்
தொகுமேலும் அறிய
தொகு- Augusta Fink, Monterey: The Presence of the Past, Chronicle Books, San Francisco, California (1972) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87701-072-3 பிழையான ISBN
- City of Monterey Parks and Recreation Master Plan, City of Monterey Parks and Recreation Department (1986)
- Environmental Hazards Element, city of Monterey, A part of the General Plan, February 1977
- Flora and Fauna Resources: City of Monterey General Plan Technical Study, prepared for City of Monterey by Bainbridge Behrens Moore Inc., Nov. 2, 1977
- General Plan, City of Monterey, (1980)
- Helen Spangenberg, Yesterday's Artists of the Monterey Peninsula, Monterey museum of Art (1976)
- Prehistoric Sources Technical Study, prepared for the city of Monterey by Bainbridge Behrens Moore Inc., May 23, 1977