மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் அல்லது பழனி மாம்பழக் கவிராயர் என்பவர் பழனியைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்பார்வையை இழந்தாலும் மற்றவர்களின் உதவியுடன் தமிழைக் கற்றவர். ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை ஏகசந்தக் கிரஹி என்றழைத்தனர். வெண்பா மற்றும் சிலேடை பாடுவதில் மாம்பழக்கவி வல்லவராய் விளங்கினார்.

முத்துராமலிங்க சேதுபதி போன்ற வள்ளல்களால் இவர் ஆதரிக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

  1. "[www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041442.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]". பார்த்த நாள் May 29, 2012.
  2. VI துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 100.