மாயவரம் சாரங்கபாணி

மாயவரம் சாரங்கபாணி (1947-1965[1])என்று அறியப்படும் சாரங்கபாணி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த ஒரு போராளி ஆவார்.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் தொகு

மதுரையில் இந்தி திணிப்பை கண்டித்து அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள்மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதையறிந்த மாணவர்கள் மாநிலந்தழுவிய அளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டங்களை நடத்தினர். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி என்று அழைக்கப்படும் அன்பநாதபுரம் வகையறா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த சாரங்கபாணியும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.[2]

தீக்குளிப்பு தொகு

மயிலாடுதுறையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்த சாரங்கபாணி, காங்கிரஸ் தலைவர்களின் ஆணவத்தையும், தமிழ்நாட்டின் தெருக்களில் இராணுவம் ஆயுதம் தாங்கி நடமாடுவதையும் கண்டித்து 15.3.65இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு தீக்குளித்து மாண்டார்.[3] உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் மருதுவாஞ்சசேரியில் அடக்கம் செய்யப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  2. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 25
  3. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 30

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயவரம்_சாரங்கபாணி&oldid=3643056" இலிருந்து மீள்விக்கப்பட்டது