மாயா கோட்னானி

இந்திய அரசியல்வாதி

மாயா சுரேந்திரகுமார் கோட்னானி (Maya Surendrakumar Kodnani) என்பவர் குஜராத் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான முன்னாள் மாநில அமைச்சர் ஆவார். பாரதீய ஜனதா வேட்பாளராக நரோடா சட்டசபைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கோட்னானி குஜராத்தின் 12 வது சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.

மாயா கோட்னானி
சட்டமன்ற உறுப்பினர், குஜராத் இந்தியா
பதவியில்
1998–2012
முன்னையவர்கோபால்தாஸ் போஜ்வானி
பின்னவர்நிர்மலா வாத்வானி
தொகுதிநாரத் (சட்டமன்ற சட்டமன்றத் தொகுதி) நாரத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1956 (அகவை 67–68)
இட்டாநகர், அருணாச்சல பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

2002 குஜராத் வன்முறையின் போது நரோடா பாட்டியா படுகொலையில் பங்கேற்றதற்காக கோட்னானிக்கு 2012 ஆம் ஆண்டில் இருபத்தெட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டில் குஜராத் உயர் நீதிமன்றத்தால் இவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற மிகவும் மதிப்பு மிக்க நபர்களில் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்ட ஒரே பெண்மணியும் இவரேயாவார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கோட்னானி ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் மகள் ஆவார். இவர் இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவிற்கு வந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை குஜராத்தி மொழி வழி பயிற்றுவிக்கும் பள்ளியில் பெற்றார். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பெண்களுக்கான இணை அமைப்பான ராஷ்டிர சேவிகா சமிதியில் சேர்ந்தார்.[3]

கோட்னானி பரோடா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு இவர் தனது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும், இவர் இங்கு மகளிர் நலம் மற்றும் மகப்பேறியல் பிரிவில் பட்டயப்படிப்பையும் முடித்தார். இவர் அகமதாபாத், நரோடா, குபர்நகரில் சிவம் மகப்பேறு மருத்துவமனையை அமைத்தார்.[4]

அரசியல் வாழ்க்கை

தொகு

1995 ஆம் ஆண்டில் அகமதாபாத் குடிமைத் தேர்தல்களுடன் கோட்னானி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நரோடா தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1998 ஆம் ஆண்டில், இவர் தேர்தலில் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிசம்பர் 2002 இல், 2002 குஜராத் கலவரங்களுக்கு பின்னர், இவர் 110,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2007 ஆம் ஆண்டில், இவரது வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 180,000 வாக்குகளாக இருந்தது.[6] 2007ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் குஜராத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இவர் அறிவிக்கப்பட்டார்.[5] நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்யப்படவிருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டில் அவர் பதவியில் இருந்து விலகினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மாயா கோட்னானி ஒரு பொது மருத்துவரான சுரேந்திர கோட்னானியை மணந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Naroda Patiya riots: Former minister Maya Kodnani gets 28 years in jail". NDTV.com. Archived from the original on 3 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.
  2. "Gujarat riots: BJP's Maya Kodnani jailed for 28 years". BBC. Archived from the original on 9 February 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2018.
  3. "Naroda Patiya: How Maya Kodnani fell from BJP poster girl to convict". Firstpost. 30 August 2012 இம் மூலத்தில் இருந்து 9 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210209035334/https://www.firstpost.com/politics/maya-kodnani-acquitted-in-naroda-patiya-riot-case-a-look-back-at-how-rss-poster-girls-journey-436232.html. 
  4. Express News Service. "The rise and fall of Maya Kodnani". Express India. Archived from the original on 27 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.
  5. 5.0 5.1 "For Maya Kodnani, riots memories turn her smile into gloom". DNA India. 21 February 2012 இம் மூலத்தில் இருந்து 2 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120902230125/http://www.dnaindia.com/india/report_for-maya-kodnani-riots-memories-turn-her-smile-into-gloom_1653031. 
  6. Mitta, Manoj (2014). The Fiction of Fact-Finding: Modi & Godhra. HarperCollins Publishers India. pp. 78–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5029-187-0.
  7. "Naroda Patiya massacre: Who is Maya Kodnani?". Yahoo! News India. 31 August 2012 இம் மூலத்தில் இருந்து 9 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210209035312/https://in.news.yahoo.com/naroda-patiya-massacre--who-is-maya-kodnani-.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_கோட்னானி&oldid=3992490" இலிருந்து மீள்விக்கப்பட்டது