நரோடா (Naroda) இந்தியாவின் குசராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகரத்தின் வடகிழக்குப் பகுதியில் பாபுநகரின் சுற்றுப்புற நகர்ப்பகுதியாகும். 1980களில் நரோடா தொழிற்பேட்டை நிறுவப்பட்ட பிறகு இதன் வளர்ச்சி மேலோங்கியது; 1996இல் இது அகமதாபாத்துடன் இணைக்கப்பட்டது. அகமதாபாத் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து எட்டு கிமீ தொலைவிலும் எஸ்பி வளையச்சாலையிலும் அமைந்துள்ள நரோடா வளர்ந்துவரும் காந்திநகர்-அகமதாபாத்-வடோதரா (GAV) நடையின் அங்கமாக விளங்குகிறது.[1]

நரோடா
நகரம்
நாடு India
மாநிலம்குசராத்
Languages
 • OfficialGujarati, Hindi
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்380025
தொலைபேசி குறி079
அருகாமை நகரம்அகமதாபாத்

புவியியல் தொகு

நரோடா 23°05′N 72°40′E / 23.083°N 72.667°E / 23.083; 72.667 அமைந்துள்ளது.[2]

வரலாறு தொகு

குசராத் வன்முறையின்போது நரோடா பாட்டியாவில் மிக மோசமான இனக்கலவரம் நடந்தேறியது.[3] 97 பேர் படுகொலை செய்யப்பட்ட இந்தக் கலவரங்கள் குறித்து விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து 62 பேர் கைது செய்யப்பட்டு அகமதாபாத் சிறப்பு தனிநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆகத்து 29, 2012 அன்று இந்த தனி நீதிமன்றம் பாரதிய ஜனதா கட்சியின்முன்னாள் மந்திரியும், தற்போதைய பெண் எம்.எல்.ஏ.யுமான மாயா கோட்னானி, பஜ்ரங்தளம் அமைப்பாளர் பாபுபஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கியது.[4] பாபுபஜ்ரங்கிக்கு வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் பெண் எம்.எல்.ஏவான கோட்நானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "www.infoahmedabad.com". Archived from the original on 2012-08-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-29.
  2. Map and Co-ordinates
  3. "‘Muslims, They Don't Deserve To Live’". Tehelka. Nov 03, 2007 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 20, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110120234459/http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107NarodaPatyaMassacre.asp. 
  4. "குஜராத்தில் 97 பேர் படுகொலை: பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. 31 பேர் குற்றவாளிகள்- 29 பேரை விடுதலை செய்து தனிக்கோட்டு தீர்ப்பு". ஆகஸ்ட் 29, 2012. மாலைமலர். Archived from the original on 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 29, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. riots "Kodnani gets 28 years in jail". ஆகஸ்ட் 31, 2012. தி ஹிந்து. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 31, 2012. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரோடா&oldid=3560141" இலிருந்து மீள்விக்கப்பட்டது