மாயா சான்சா
மாயா சான்சா (Maya Sansa)(பிறப்பு 25 செப்டம்பர் 1975) என்பவர் இத்தாலிய நடிகை ஆவார்.
மாயா சான்சா Maya Sansa | |
---|---|
பிறப்பு | 25 செப்டம்பர் 1975 உரோம், இத்தாலி |
பணி | நடிகை |
இளமையும் திரைப்படமும்
தொகுமாயா சான்சா ஈரானிய தந்தை மற்றும் இத்தாலியத் தாய்க்கு மகளாக ரோமில் பிறந்தார்.[1] இவர் 14 வயதாக இருந்தபோது, ரோமில் உள்ள "விர்ஜிலியோ" என்ற உயர்நிலைப் பள்ளியில் நடிப்பினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் கில்ட்ஹால் இசை மற்றும் நாடகப் பள்ளியில் படிப்பினைத் தொடர இலண்டனுக்குச் சென்றார். இங்கு இவர் நடிப்பில் பட்டம் பெற்றார். மார்கோ பெல்லோச்சியோவால் இவரது புதிய படமான லா பாலியாவில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், மாயா குட்மார்னிங், நைட் படங்களில் நடித்ததன் மூலம் பெலோச்சியோவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றினார். சன்சா மார்கோ டுல்லியோ ஜியோர்டானாவுடன் தி பெஸ்ட் ஆப் யூத் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.[2]
த நியூயார்க் டைம்ஸ் 2 மே 2004 அன்று கட்டுரையை ஒன்றை வெளியிட்டது. இதில் இத்தாலியத் திரைப்படத்துறையின் புதிய பிம்பம் மாயா, என்று பெயரிட்டது.[3]
சூன் 14, 2013-ல், டார்மன்ட் பியூட்டியில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான டேவிட் டி டொனாடெல்லோ விருதினை வென்றார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமாயாவிற்கு தலிதா என்ற மகள் உள்ளார் மாயாவின் கணவர் பேப்ரிஸ் ஸ்காட். இவர்கள் பாரிஸில் வசிக்கின்றனர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cappelli, Valerio (25 November 2013). "Maya Sansa: ho conosciuto a 15 anni mio padre iraniano". www.cinema-tv.corriere.it. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
- ↑ Scalise, Irene Maria. "Maya Sansa". www.ricerca.repubblica.it. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
- ↑ "IL 'NEW YORK TIMES' SCOPRE MAYA SANSA". www.trovacinema.repubblica.it. Archived from the original on 20 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Fumarola, Silvia (14 June 2013). "Sei David per Giuseppe Tornatore trionfa ai David di Donatello 2013". www.repubblica.it. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
- ↑ Lacava, Cristina (2017-04-10). "Maya Sansa: «Vi racconto la mia famiglia aperta»". iO Donna (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.