மாயா சிங்
இந்திய அரசியல்வாதி
மாயா சிங் (பிறப்பு: ஆகத்து 15, 1950) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தை மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். மாயா சிங் 2016ஆம் ஆண்டு வரை 'பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு' மற்றும் 2016 முதல் திசம்பர் 2018 வரை 'நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி' இலாகா பொறுப்பினை வகித்த மத்தியப் பிரதேச அரசின் அமைச்சர் ஆவார்.[1]
மாயா சிங் Maya Singh | |
---|---|
குவாலியர் நிகழ்ச்சி ஒன்றில் மாயா சிங் | |
நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் மத்தியப் பிரதேச அரசு | |
பதவியில் 2016 – திசம்பர் 2018 | |
பின்னவர் | ஜெயவர்தன் சிங் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2013 – திசம்பர் 2018 | |
பின்னவர் | முன்னாலால் கோயல் |
தொகுதி | குவாலியர் கிழக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1950 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | தயானேந்திர சிங் |
வாழிடம் | குவாலியர் |
இணையத்தளம் | http://www.mayasingh.in |
Source 1 | |
இவர் 2013ஆம் ஆண்டு திசம்பர் 8ஆம் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குவாலியர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 59,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gwalior Assembly Election: Final Result 2013 (Vidhan Sabha)". SouLSteer. Archived from the original on 11 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)