மாய் பாகி (Mai Bhagi) (1920 - 7 சூலை 1986) ஒரு பாக்கித்தானின் நாட்டுப்புற இசைக்கலைஞராவார். பாக் பாரி (அதிர்ஷ்டசாலி) என்ற பெயரில் சிந்துவின் தார்பார்க்கர் மாவட்டத்திலுள்ளா மித்தியில் பிறந்தார். இவர், தார்ப் பாலைவனத்தில் ஒரு கிராமத்தில் வளர்ந்தார். இவரது தந்தை வான்குயுன் பக்கிர் என்பவரும், கதீஜா மகன்ஹார் என்பவரும் அந்த காலத்தில் தங்கள் பிராந்தியத்தின் பாடகர்களாக அறியப்பட்டனர். [2]

மாய் பாகி
பிறப்புபாக் பாரி
1920[1]
மித்தியில் திப்லோ சிந் அருகில், பிரித்தானிய இந்தியா, தற்போதைய தார்பார்க்கர் மாவட்டம், சிந்து மாகாணம், பாக்கித்தான்
இறப்பு7 சூலை 1986 (வயது 66)
தார்பார்க்கர் மாவட்டம், சிந்து மாகாணம், பாக்கித்தான்
பணிநாட்டுப்புற பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1968 - 1986
விருதுகள்செயல்திறன் பெருமை விருது (1981)

இவர் தனது 16 வயதிலேயே நாட்டுப்புற பாடகர் ஹோதி பக்கீரை மணந்தார். [3] பாக்கித்தானின் நாட்டுப்புற பாடகி அபிதா பர்வீனின் கணவரான இசைத் தயாரிப்பாளர் ஷேக் குலாம் உசேன், பாக்கித்தான் வானொலியில் இவருக்கு வாய்ப்பளித்தார். மேலும் இவரது பதிவுகள் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. இவரது நாட்டுப்புற பாடலான 'கரி வேம் கே நீச்சி' (ஒரு வேப்பமரத்தின் அடியில்) பாக்கித்தான் மக்களிடையே ஒரு பெரிய வெற்றியானது. மேலும், இவரது தகுதியையும் தக்கவைத்தது. பாக்கித்தான் அரசாங்கம் இவருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வதற்கு நிதி உதவியை வழங்கியது. மேலும் 1986ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை தனது இசை வாழ்க்கையைத் தொடர்ந்தார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "12 songs from Pakistan's mountains, deserts, shrines and streets". Dawn (newspaper), Updated 15 May 2014, Retrieved 9 May 2020.
  2. "12 songs from Pakistan's mountains, deserts, shrines and streets". Dawn (newspaper), Updated 15 May 2014, Retrieved 9 May 2020.
  3. 30th Death Anniversary of Mai Bhagi observed பரணிடப்பட்டது 2019-12-30 at the வந்தவழி இயந்திரம் Published 8 July 2016, Retrieved 9 May 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய்_பாகி&oldid=3594065" இலிருந்து மீள்விக்கப்பட்டது