மாராயம்

மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. [1]

 • அரையன் [2] <-> அரசன் என வருவது போலவும், அரசன் > ராசன் என வருவது போலவும் மா-அரையன் என்னும் சொல் மாராயன் என மருவும்.
 • "பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். [3] அரசன் பெறும் விருது. [4]

மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான்.

சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். [5]

 • வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [6]
 • மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது. [7]

அடிக்குறிப்புதொகு

 1. மாராயம் பெற்ற நெடுமொழியானும்,(தொல்காப்பியம் 3-65, புறத்திணையியல்)
 2. அரை என்பது நிழல். மக்களுக்கு நல்வாழ்வு என்னும் நிழலைத் தந்து காப்பாற்றுபவன் அரையன்
 3. விளக்கம்
 4. அரசன் பெறும் விருது
 5. சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
  தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 5)
 6. நெடுமாராயம் நிலைஇய வஞ்சியும் (சிலப்பதிகாரம் 25-142)
 7. கோல் கோடி, மாராயன், செய்யாமை முன் இனிது (இனியவை நாற்பது 5)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாராயம்&oldid=1537623" இருந்து மீள்விக்கப்பட்டது