மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி

மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி, (Marimallappa High School) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் நகரத்தில் சிறீ குரிகர் மாரிமல்லப்பா (1818-1871) அவர்களால் ஓர் உள்நாட்டுப் பள்ளியாக நிறுவப்பட்டது. பள்ளியின் நிர்வாகம் மகாராசா பத்தாம் சாமராசேந்திர வாடியாரால் ஆதரிக்கப்பட்டது. பள்ளி பின்னர் 1876 ஆம் ஆண்டில் மாரிமல்லப்பா கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியது.

மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி
Marimallappa's High School
பிரதான கட்டடம் (1890)
முகவரி
சீதா விலாசு சாலை, கிருட்டிணராசா மொகல்லா
மைசூர், 570024
இந்தியா
அமைவிடம்12°18′23″N 76°38′47″E / 12.30639°N 76.64639°E / 12.30639; 76.64639
தகவல்
வகைஅர்சு நிதியுதவி தனியார் பள்ளி
நிறுவல்1876
தலைமை ஆசிரியர்எசு மம்தா அரிகிருட்டிணா
ஆசிரியர் குழு33 ஆசிரியர்கள் (2016-2017)
சராசரி வகுப்பின் அளவு15x20 சராசரி வகுப்பறை
மொழிகன்னடம் மற்றும் ஆங்கிலம்
வளாகம்நகர்ப்புறம்

சிறப்பு தொகு

2021 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 100% தேர்ச்சி விகிதத்தைப் பள்ளி எட்டியது,[1] கர்நாடகாவில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு பெண் உட்பட.[2][3] சிறந்த தேர்வு முடிவுகளுக்கு அருகிலுள்ள சத்வித்யா பாடசாலையுடன் பள்ளி போட்டியிடுகிறது.[4]

துணை நிறுவனங்கள் தொகு

  • மாரிமல்லப்பா உயர் தொடக்கப் பள்ளி
  • மாரிமல்லப்பா முன் பல்கலைக்கழகக் கல்லூரி
  • மாரிமல்லப்பா மாலைக் கல்லூரி
  • மாரிமல்லப்பா வணிக மேலாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி
  • மாரிமல்லப்பா மாரிமல்லம்மா மகளிர் கலை மற்றும் வணிகக் கல்லூரி

மேற்கோள்கள் தொகு

  1. "Schools fare better than last year". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 October 2022. http://articles.timesofindia.indiatimes.com/2009-05-02/mysore/28159505_1_pc-schools-fare-class. 
  2. "Mysore girl takes top slot by one mark". தி இந்து. 29 May 2009. http://www.hindu.com/2009/05/29/stories/2009052957190100.htm. 
  3. "Mysore girl is topper in SSLC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 May 2009. http://articles.timesofindia.indiatimes.com/2009-05-29/mysore/28166751_1_revaluation-total-marks-topper. 
  4. "Colleges in race for better results". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 October 2022. http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/mysore/28205556_1_sslc-students-college-official.