மார்கரிடா டேவினா ஆண்ட்ரியாட்டா

பிரேசிலிய நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்

மார்கரிடா டேவினா ஆண்ட்ரியாட்டா (Margarida Davina Andreatta) பிரேசில் நாட்டின் வரலாறு மற்றும் தொழில்துறை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 05 ஆம் தேதியன்று பிறந்தார். 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் தேதியன்று இறந்தார்.[1]

டேவினா ஆண்ட்ரியாட்டா, பரானாவின் பொன்டிபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் புவியியல் மற்றும் வரலாற்றைப் படித்தார். 1957 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். மேலும் 1982 ஆம் ஆண்டு சாவோ பாலோ பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1972 ஆம் ஆண்டு முதல் அவர் மியூசியு பாலிசுடாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார், மேலும் சாவோ பாலோ பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். டேவினா ஆண்ட்ரியாட்டா தனது தொழில் வாழ்க்கையில் ஐம்பத்து நான்கு தொல்பொருள் தளங்களில் பணியாற்றினார். சாவோ பாலோ மற்றும் அதைச் சுற்றியுள்ள வரலாற்று தளங்களில் நிபுணத்துவம் பெற்றார். 2009 ஆம் ஆண்டில், பிரேசிலின் தேசிய தொல்லியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து. பிரேசிலிய தொல்லியல் கழகம் மற்றும் தேசிய வரலாற்று மற்றும் கலை பாரம்பரிய நிறுவனம் ஆகியோரிடமிருந்து சிறந்த சாதனையாளர் விருதைப் பெற்றார். [1] [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 சானெட்டினி, பாலோ (06-சனவரி-2015). "மார்கரெட் டேவினா ஆண்ட்ரேட்டாவுக்கு அஞ்சலி". பிரேசிலிய தொல்பொருள் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 31-திசெம்பர்-2016. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  2. "மார்கரிடா டேவினா ஆண்ட்ரேட்டா (1922–2015) - அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொல்லியல் துறைக்கு அர்ப்பணித்துள்ளார்". சாவோ பாலோவின் படலம். 08-சனவரி-2015. http://www1.folha.uol.com.br/cotidiano/2015/01/1572053-margarida-davina-andreatta-1922---2015---mais-de-meio-seculo-dedicado-a-arqueologia.shtml. 
  3. "92 வயதில், பேராசிரியர் மார்கரிடா டேவினா ஆண்ட்ரேட்டா இறந்தார்". சாவோ பாலோ பல்கலைக்கழகம். 05-சனவரி-2015. பார்க்கப்பட்ட நாள் 31-திசெம்பர்-2016. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)