மார்கரெட் பார்பலேட்டு

ஆத்திரேலிய நாவலாசிரியர்

மார்கரெட் ஈவ்லின் பார்பலேட்டு (Margaret Evelyn Barbalet; பிறப்பு: 1949) ஆத்திரேலிய நாவலாசிரியரும், வரலாற்றாளரும் ஆவார்.

மார்கரெட் பார்பலேட்டு
Margaret Barbalet
பிறப்புமார்கரெட்டு ஈவ்லின் ஆர்டி
1949 (அகவை 74–75)
அடிலெயிட், தெற்கு ஆத்திரேலியா
தொழில்நாவலாசிரியர், வரலாற்றாளர்
கல்வி நிலையம்அடிலெயிட் பல்கலைக்கழகம்
இணையதளம்
www.margaretbarbalet.com

சுயசரிதை

தொகு

தெற்கு ஆத்திரேலியாவின் அடிலெய்டு நகரில் பிறந்த பார்பலேட்டு தாசுமேனியாவில் வளர்ந்தார். 1973 ஆம் ஆண்டு அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார் [1]

அடிலெய்டு குழந்தைகள் மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக அம்மருவத்துமனையின் வரலாற்றை எழுத இவர் பணிக்கப்பட்டார். இந்த புத்தகம் 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயெஃப்ரி தட்டனால் [2] வெளியிடப்பட்டது. ஃபார் ஃப்ரம் எ லோ கட்டர் கேர்ள் என்பது இவரது இரண்டாவது புத்தகமாகும். அமைப்பில் நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைகள் பற்றி முன்னாள் மாநில மாணவர்களின் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலை எழுதினார். [3]

பார்பலெட்டு பின்னர் புனைகதைக்குத் திரும்பினார். நாவல்கள் மற்றும் சிறுவர் புத்தகங்கள் சிறுகதைகளுடன் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கான்பெரா நகரத்துக் கட்டுக் கதைகளாகும்: இக்கதைகள் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. [4]

படைப்புகள்

தொகு

புனைகதை அல்லாதன

தொகு
  • அடிலெய்ட் குழந்தைகள் மருத்துவமனை 1876-1976: ஒரு வரலாறு, 1975
  • லோ கட்டர் கேர்லிலிருந்து வெகு தொலைவில்: மாநில மாணவர்களின் மறக்கப்பட்ட உலகம், தெற்கு ஆத்திரேலியா, 1887-1940, 1983

நாவல்கள்

தொகு
  • பிளட் இன் தி ரெயின், 1986
  • ஸ்டீல் பீச், 1988
  • லேடி, பேபி, இயிப்சி, குயின், 1992
  • தி பிரசன்சு ஆப் ஏஞ்சல்ல்சு, 2001

பட புத்தகங்கள்

தொகு
  • தி உல்ஃப், ஜேன் டேன்னரால் விளக்கப்பட்டது, 1991
  • ரெக்கி: தெருவின் ராணி, ஆண்ட்ரூ மெக்லீனால் விளக்கப்பட்டது, 2003

மேற்கோள்கள்

தொகு
  1. "Margaret Barbalet". AustLit: Discover Australian Stories (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  2. "Book Records Children's Hospital's Century of Social and Medical Progress". The Coromandel Times (South Australia) 30 (19): p. 2. 18 December 1975. http://nla.gov.au/nla.news-article261094116. பார்த்த நாள்: 29 August 2021. 
  3. "The Harsh World of State Wards". The Canberra Times (Australian Capital Territory, Australia) 58 (17,527): p. 16. 24 September 1983. http://nla.gov.au/nla.news-article116408274. பார்த்த நாள்: 29 August 2021. 
  4. "Canberra Tales: Stories". AustLit: Discover Australian Stories (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_பார்பலேட்டு&oldid=3263191" இலிருந்து மீள்விக்கப்பட்டது