மார்கி யூகின்-ரிச்சர்டு
மார்கி யூகின்-ரிச்சர்டு (Margie Eugene-Richard) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலராவார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செல் வேதி தொழிற்சாலையிலிருந்து அதன் நச்சு உமிழ்வை 30 சதவிகிதம் அளவுக்கு குறைக்கவும், 5 மில்லியன் டாலர்களை ஒரு சமூக மேம்பாட்டு நிதிக்கு பங்களிக்கவும் மார்கி ரிச்சர்டு ஒப்பந்தம் பெற்றார்.
மார்கி யூகின்-ரிச்சர்டுMargie Eugene-Richard | |
---|---|
பிறப்பு | 1941 அல்லது 1942 |
அறியப்படுவது | சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2004) |
மார்கி ரிச்சர்டு வரலாற்று ரீதியான ஆப்பிரிக்க-அமெரிக்க சுற்றுப்புறமான லூசியானாவின் நோர்கோவிலுள்ள ஓல்டு டயமண்டில் வளர்ந்தார். செல் வேதி தொழிற்சாலைக்கு அருகில் 25 அடி தூரத்தில் இவரது வீடு இருந்த்து. பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது சமூகத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இத்தொழிற்சாலையே காரணம் என்று கடினமாகப் போராடினார்.
இத்தகைய வெற்றிகரமான பிரச்சாரத்திற்காக 2004 ஆம் ஆண்டில் கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் மார்கி ரிச்சர்டு ஆவார். [1]
மார்கி ரிச்சர்டு குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் ஓல்டு டயமண்டு பகுதியில் வசித்து வருகின்றனர். தெற்கு மிசிசிப்பி நதி பிராந்தியத்தில் இப்பகுதி "புற்றுநோய் சந்து" என்று அழைக்கப்படுகிறது. செல் தொழிற்சாலைக்கும் அதன் துணை நிறுவனத்திற்கும் சொந்தமான மோட்டிவா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடையில் வாழ்கின்ற 1,500 குடியிருப்பாளர்கள் அதிக அளவு புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள் மற்றும் பிற கடுமையான உடல்நல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோர்கோவின் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்கி தனது சமூகத்தை வழிநடத்துகிறார் என்று நம்புகிறார் என சுற்றுச்சூழல் நீதிக்கான தெற்கு மையத்தின் இயக்குனர் டாக்டர் பெவர்லி ரைட் கூறுகிறார். ஆனால் சமூகம் என்பது ஒரு மழுப்பலான நிலை. அதற்கு கதவுகள் இல்லாததால் நான் கதவுகளைத் தட்ட மாட்டேன் என்று மார்கி ரிச்சர்டு கூறுகிறார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "North America 2004. Margie Eugene-Richard. United States. Toxic & Nuclear Contamination". Goldman Environmental Prize. Archived from the original on 22 October 2010. பார்க்கப்பட்ட நாள் 4 December 2010.
- ↑ Harkinson, Josh (Winter 2006). ""Life after Katrina: environmental activist Margie Eugene-Richard says: 'you have to go out and command justice'."". OnEarth: 10. http://link.galegroup.com/apps/doc/A140998592/BIC1?u=usocal_main&xid=a4632bee..