மார்க்கா ஆறு
மார்க்கா ஆறு (Markha River) இந்தியாவில் இலடாகு பகுதியில் ஓடும் ஓர் ஆறு ஆகும். இது ஜான்சுகார் ஆற்றின் துணை ஆறாகும். இது லாங்டாங் சூ மற்றும் நிமாலிங் சூ சந்திப்பில் தொடங்குகிறது. ஆற்றுப் பள்ளத்தாக்கை ஒட்டியுள்ள கிராமங்களில் ஸ்கியு (ஸ்கியு) மார்க்கா, உம்லுங் மற்றும் காங்கர் ஆகியவை அடங்கும். மார்க்கா ஆற்றுப் பகுதியில் ஹெமிஸ் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[1]
இலடாக் மிகவும் பிரபலமான மலையேற்றப் பாதைகளில் ஒன்றான மார்க்கா பள்ளத்தாக்கு, மேற்கில் ஸ்பிடுக்கிற்கு அருகிலுள்ள கந்தா லா கணவாயிலிருந்து அணுகக்கூடியது. இது பொதுவாக மலையேற்றத்தின் தொடக்க இடமாகும். கெமிசுக்கு அருகிலுள்ள கோங்மாரு லா கணவாயில் மலையேற்றம் வழக்கமாக முடிவடைகிறது.[2] மார்க்கா பள்ளத்தாக்கு மலையேற்றப் பாதையில் உள்ள கிராமங்கள் உரும்பாக், சிங்கோ, ஸ்கையு, சாரா, மார்க்கா மற்றும் கங்கர் ஆகும்.
பள்ளத்தாக்கின் உச்சியை நோக்கினால் 6,400 மீட்டர் உயரமுள்ள (21,000 ) காங் யாட்ஸே மலையைக் காணலாம். மார்க்கா ஆறு ஸ்டோக் மலைத்தொடரின் தெற்கே செல்கிறது. இதில் 6,153 மீட்டர் உயரமுள்ள (20,187 ) ஸ்டோக் காங்க்ரி மலை உள்ளது.
மக்கள்தொகை
தொகுநாடோடி குடும்பங்கள் இந்தப் பள்ளத்தாக்கில் தங்கள் கவரிமாவினை மேய்த்து வருகின்றனர்.[3]
சுற்றுலா
தொகுபல சிறிய மடாலயங்கள் இப்பகுதியில் உள்ளன. இவற்றில் டெச்சா மடாலயம் மார்க்கா பள்ளத்தாக்கில் உள்ள மிக முக்கியமான புத்த மடாலயம் ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hemis National Park on Google Maps". பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
- ↑ "The 4 Coolest Treks in Ladakh". AlienAdv Blog. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.
- ↑ 3.0 3.1 Maggie and Richard (2018-08-31). "Ladakh's Monasteries, Palaces and Fortresses". Monkey's Tale (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.