மார்க்சின் தொழில்நுட்ப வரலாற்றுக் குறிப்பேடுகள்

காரல் மார்க்சு தொழில்நுட்ப வரலாறு பற்றிப் பல குறிப்பேடுகளை எழுதியுள்ளார். இவை வெளியிடப்படாமலே உள்ளன. இவை உள்ள இடமும் நெடுங்காலமாகத் தெரியவில்லை, என்றாலும் இவை முன்பு மார்க்சிய எழுத்தாளர்களால் படித்து விவாதிக்கப்பட்டுள்ளன. "தொழில்நுட்பமும் அயன்மையாதலும் பற்றி காரல் மார்க்சு" எனும் அண்மை ஆய்வை செய்த முனைவர் ஏமி வெண்டுலிங் அவற்றைப் பார்த்திருக்கலாம்.

மாஸ்கோ ஆவணக் காப்பகத்தில் இருந்தபோது இவற்றை கியார்கி லுகாக்சு ஆய்வு செய்துள்ளார். இவர் 1925இல் "புது இடதுசாரி மீள்பார்வை" (New Left Review) இதழ் எண் 39, செப்டம்பர்/அக்டோபர் 1966இன் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இவற்றை மேற்கோள் காட்டி புக்காரினின் தேவையற்ற தொழில்நுட்பவியத்தை விமர்சனம் செய்துள்ளார். வரலாறும் வகுப்புணர்வும் (வர்க்க உணர்வும்) எனும் 1967ஆம் ஆண்டுக் கட்டுரையின் 1971ஆம் ஆண்டு மெர்லினுடைய மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரையில் பக்கம்-xxxiii பற்றிய விமர்சனத்தின் முறையியல் முக்கியத்துவம் குறித்து குறிப்புரை ஒன்று கொடுத்துள்ளார்.[1]

எங்கெல்சு தொழினுட்பம் பற்றி மார்க்சு திரட்டிய குறிப்புகள் அவரது சிறப்புப் பணிகளில் ஒன்றாகும் எனத் தங்கள் இருவரின் அறிவுசார் வேலைப்பிரிவினை குறித்த விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.[2]

ஏங்கல்சுக்கு மார்க்சு 1863 ஜனவரி 28இல் எழுதிய கடித்த்தில் இக்குறிப்பேடுகளைப் பற்றி மேற்கோள் காட்டி இவ்வாறு கூறுகிறார்:

… நான் எனது தொழில்நுட்பச் சுருக்கங்கல் அடங்கிய குறிப்பேடுகளை மீண்டும் படித்தேன். தொழிலாளர்களுக்கான நடைமுறை வகுப்பு எடுக்க (செய்முறைகளைப் பற்றி மட்டும்) பேரா. வில்லிசைக் கேட்டுள்ளேன். (இது ஃஅக்சிலீ விரிவ்ரைகள் ஆற்றிய புவியியல் நிறுவனத்தில் நட்த்தப்படும்)… தொழிநுட்ப வரலாற்றுக் குறிப்புகளை மீளப் படித்தபோது வெடிமருந்துக் கண்டுபிடிப்பு மட்டுமன்றி, காந்தத் திசைக்காட்டியும் அச்சுத் தொழில்நுட்பமும் 16- 18ஆம் நூற்றாண்டுகளின் முதலாளியப் பொருளியல் வளர்ச்சிக்கு வேண்டப்படும் ஆயத்தங்களாகும் என்ற முடிவுக்கு வந்தேன். இக்காலகட்டத்தில் தான் கைவினைமுறையில் இருந்து பெருந்தொழிலக முறைக்கு சமூகப் பொருளாக்கம் (Production) மாறியது. இந்த இரு பொருளாயத அடிப்படைகளும் சார்ந்துதான் எந்திரமயத் தொழிலகங்கள் உருவாகியுள்ளன … [3]

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தனக்குள்ள ஆர்வம் பற்றி மார்க்சு தன் எழுத்துகளின் ஊடே அடிக்கடி மேற்கோள்களைச் சுட்டியுள்ளர். இந்தக் குறிப்புகளோடு மேலும் தன் மூலதனம் நூலின் தொகுதி ஒன்றில் எந்திரங்களும் பேரளவுத் தொழிலகங்களும் என்ற இயலின் தொடக்கப் பெரிய அடிக்குறிப்பில் தொழில்நுட்பம் பற்றிய உய்யநிலை வரலாற்றின் தேவையைக் குறிப்பிடுகிறார்.[4]

நேத்தன் உரோசன்பெர்கு "தொழில்நுட்ப மாணவராக மார்க்சு" எனும் கட்டுரையைத் தன் கரும்பேழைக்குள் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் காண்க, Karl Marx on Technology and Alienation - Amy E. Wendling, 2009

குறிப்புகள்

தொகு
  1. György Lukács History and Class Consciousness London, Merlin, 1971
  2. Marx & Engels, Letters on 'Capital 1983, New Park
  3. Marx & Engels, Letters on 'Capital 1983, New Park. p.82-84
  4. Marx Karl Capital, 1976, London: Penguin p.493-4