மார்க் டெய்லர்

ஆத்திரேலிய துடுப்பாட்க்காரர்

மார்க் அந்தோனி டெய்லர் (Mark Anthony Taylor பிறப்பு: அக்டோபர் 27, 1964) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பட்ட வீரர் மற்றும் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டத்தின் இயக்குநரும் நைன் நெட்வொர்க்கின் தற்போதைய வர்ணனையாளருமாவார்.

இவர் 1988 முதல் 1999 வரை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தொடக்க மட்டையாளரகவும், 1994 முதல் 1999 வரை தலைவராகவும் இருந்தார், ஆலன் பார்டருக்கு அடுத்ததாக இவர் தலைவர் பொறுப்பினை ஏற்றார்.ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் ஒரு கருவியாக இவர் பரவலாகக் கருதப்பட்டார்.1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரை 3-0 என இழந்ததும் இவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.

இவர் 1972 இல் வாகா வாகாவுக்குச் சென்று லேக் ஆல்பர்ட் துடுப்பாட்ட சன்கத்தில் விளையாடினார். 1985 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸிற்காக இவர் அறிமுகமானார்.

இவர் பிப்ரவரி 2, 1999 அன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 104 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் , 19 நூறுகள் மற்றும் 40 அரை நூறுகள் உட்பட 43.49 மட்டையாட்ட சராசரியுடன் 7,525 ஓட்டங்கள் எடுத்தார். இவர் சிறந்த களத் தடுப்பாளர் ஆவார். இவர் 157 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.பின்னாளில் இந்தச் சாதனையினை ராகுல் திராவிட் முறியடித்தார்.'கேப்டன் க்ரம்பி' என்ற புனைப்பெயரைப் பெற்ற இவரது முன்னோடி ஆலன் பார்டருக்கு மாறாக, டெய்லர் எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான நடத்தைக்காக பாராட்டுக்களை வென்றார். இவருக்குப் பின்னர் வந்த ஸ்டீவ் வா, பார்டர் மற்றும் டெய்லரால் ஆகியோரால் வலிமையான அணியாக கருதப்பட்ட அணியினை மேலும் வலிமையாக்கினர்.1999 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஆண்டின் சிறந்தவராகப் பெயரிடப்பட்ட இவர் தற்போது ஆத்திரேலியத் துடுப்பாட்டத்தின் முன்னாள் இயக்குநரும் நைன் நெட்வொர்க்கின் வர்ணனையாளருமாக உள்ளார் [1]

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

வங்கி மேலாளர் டோனி டெய்லருக்கும், இவரது மனைவி ஜூடிக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை ஆவார். மார்க் டெய்லரின் ஆரம்ப ஆண்டுகள் வாகா வாகாவில் இருந்தது. அங்கு இவரது குடும்பம் இவரது எட்டாம் வயதில் இடம் பெயர்ந்தது. இவரது தந்தை விளையாட்டு பின்னணி கொண்டிருந்தார், நியூகேஸில் முதல் தர ரக்பி விளையாடினார். தனது இளம் வயதில் கால்பந்து மற்றும் துடுப்பாட்டத்தினை விரும்பினார். இவர் தனது விட்டின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மட்டையாட்டம் செய்ய கற்றுக்கொண்டார். இவரது தந்தை கார்க் பந்துகளை இவருக்கு பந்து வீசினார்.

டெய்லர் தனது ஆரம்பப் பள்ளியில் தொடக்க மட்டையாளராக விளையாடினார், மேலும் தனது பதின்மூன்றாவது வயதில் வாகாவில் உள்ள போல்டன் பூங்காவில் உள்ள லேக் ஆல்பர்ட் சங்கத்தில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார்.[2] பின்னர் இவரது குடும்பத்தினர் சிட்னியின் வடக்கு கரைக்குச் சென்றனர், அங்கு இவர் சிட்னி கிரேடு துடுப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அணியில் சேர்ந்தார். சாட்ஸ்வுட் உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்த இவர்,[3] பின்னர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பிரிவில் பட்டம் பெற்றார்.

சான்றுகள்

தொகு
  1. Richie Benaud: A Marvellous Life 1930–2015
  2. "Mark Taylor". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2007.
  3. Perry, p. 332.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_டெய்லர்&oldid=4169172" இலிருந்து மீள்விக்கப்பட்டது