மார்செல் புரூஸ்ட்
மார்செல் புரூஸ்ட் (Marcel Proust) எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட வலன்டீன் லீயிஸ் ஜார்ஜஸ் இயுஜீன் மார்செல் புரூஸ்ட் (10 ஜூலை 1871 – 18 நவம்பர் 1922) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும் ஆவார். இழந்த நேரத்தைத் தேடல் (பிரெஞ்சு மொழி: À la recherche du temps perdu) என்னும் தன்கதை கலந்த புதினத்தை எழுதியவராக இவர் பெரிதும் அறியப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த புனைகதைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இது 1913 தொடக்கம் 1927 வரையான காலப் பகுதியில் ஏழு பகுதிகளாக வெளிவந்தது.
மார்செல் புரூஸ்ட் | |
---|---|
பிறப்பு | மார்செல் புரூஸ்ட் 10 ஜூலை 1871 Auteuil, பிரான்ஸ் |
இறப்பு | 18 நவம்பர் 1922 (வயது 51) பாரிஸ், பிரான்ஸ் |
தொழில் | புதின எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர் |
வகை | நவீனத்துவம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இழந்த நேரத்தைத் தேடல் |
தாக்கங்கள்
தொகுசெயிண்ட்-சைமன், பிராண்டோம், ஹொனோரே டி பால்சக், சார்லஸ் போட்லர், அனதோலே பிரான்ஸ், ஹென்றி பேர்க்சன், பியோடோர் டொஸ்டோவ்ஸ்கி, ஜான் ரஸ்க்கின், லியோ டால்ஸ்டாய், ஆர்தர் ஷோப்பன்ஹவர், ஸ்டெண்டால், வில்லியம் ஷேக்ஸ்பியர்
பின்பற்றுவோர்
தொகுஅஹ்மெட் அல்தான், ஜான் பான்வில்லி, சாமுவேல் பெக்கெட், ஜான் காக்டோ, கிரகாம் கிரீன், ஜாக் கெருவாக், நகுயிப் மஹ்பூஸ், மனுவேல் முஜிக்கா லைனெஸ், ஐரிஸ் முர்டோக், விளாமிடிர் நபோக்கோவ், ஆர்ஹான் பாமுக், ட்ரூமன் கப்போட், எட்மண்ட் வைட், வெர்ஜீனியா வூல்ப்.