மார்ஸ் ஒன்
மார்ஸ் ஒன் (Mars One) என்பது ஒரு சிறிய தனியார் டச்சு அமைப்பாகும், இந்நிறுவனம் செவ்வாய்க் கோளில் முதல் மனிதர்களை தரையிறக்கப் பயன்படுத்துவதாகவும், நிரந்தர மனிதக் குடியேற்றத்தை நிறுவுவதற்காக அவர்களை அங்கேயே விட்டுவிடுவதாகவும் கூறி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றது.[1][2][3] 2012 இல் வெளிவந்த அதன் அறிவிப்பு முதல் 2019 இன் தொடக்கத்தில் அந்நிறுவனம் செயலிழக்கும் வரை, அது கோடிக்கணக்கான டாலர்களைப் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4] இந்த அமைப்பு ஒரு விண்வெளி நிறுவனமும் அல்ல, வன்பொருளையும் தயாரிக்கவில்லை.[5]
உருவாக்கம் | 2011 |
---|---|
நிறுவனர் | பாசு லான்சுடோர்ப் |
வகை | தனியார் நிறுவனம் |
சட்ட நிலை | செயலிழந்துள்ளது |
நோக்கம் | நிரந்தர செவ்வாய் குடியேற்றம் |
தலைமையகம் | |
பாசு லான்சுடோர்ப் | |
பணிக்குழாம் (2012) | 4 |
வலைத்தளம் | https://www.mars-one.com |
மார்ஸ் ஒன் இரண்டு நிறுவனங்களைக் கொண்டிருந்தது: இலாப நோக்கற்ற மார்ஸ் ஒன் அறக்கட்டளை, மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமான "மார்ஸ் ஒன் வென்ச்சர்சு", இது ஒளிபரப்பு உரிமைகளையும் நிர்வகிக்கும் இலாப நோக்கற்ற இன்டர்பிளானட்டரி மீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டு பங்குதாரராக இருந்தது. நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் அறக்கட்டளை இந்தத் திட்டத்தை நிர்வகித்து வந்தது. இந்த சிறிய நிறுவனத்தில் நான்கு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்,[6] பணியாளர்கள் தேர்வு, பயிற்சி மற்றும் குடியேற்றம் பற்றிய ஊடகங்களை (ஆவணப்படங்கள்) விற்பதன் மூலம் இலாபம் ஈட்ட எண்ணியது.[7] முதல் பணியானது 2010களில் சுமார் $6 பில்லியன் செலவாகும் என அதன் பணிப்பாளர் பாசு லான்சுடோர்ப் மதிப்பிட்டார்.[7][8]
இந்த அறிவிப்பு அறிவியலாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விண்வெளித் துறையில் இருப்பவர்களால் விமர்சிக்கப்பட்டு கண்டனத்துக்குள்ளானது. கல்வியாளர்கள், விண்வெளிப் பயணத் துறை மற்றும் சர்வதேச செய்திகளால் இந்தக் கருத்து தற்கொலைப் பணி என அழைக்கப்பட்டது.[6] 2019 சனவரி 15 அன்று, இலாப நோக்கற்ற நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினால், இந்நிறுவனம் செயலிழந்தது.[9][10]
திட்டம்
தொகுதற்காலிக குடியிருப்பைச் செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்தி மக்களை அங்கு குடியேற்றுவதுதான் அவரின் திட்டத்தின் நோக்கம் ஆகும். 2012 மே மாதம் இத்திட்டம் வகுக்கப்பட்டது.[11] 2023ம் ஆண்டு இங்கிருந்து 4 பேர் 60 குழுக்களாக அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம்
தொகுமார்ஸ் ஒன் திட்டத்திற்காக அவர் கணினி மூலம் முன்பதிவு செய்ய அறிவித்திருந்தார். இதன் மூலம் அமெரிக்கர்கள் மட்டும் 48 ஆயிரம் பேரும், இந்தியர்கள் 20 ஆயிரம் பேரும் 2015 ம் ஆண்டு செல்ல விண்ணப்பித்திருந்தார்கள். ஆக மொத்தமாக 2 லட்சம் பேர் அடங்குவர்.
குடியிருப்பு
தொகுசெவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளில் முதல் கட்டமாக 2500 கிகி எடை கொண்ட உதிரிப்பாகங்கள் 2016ம் ஆண்டுகளில் கொண்டு சேர்க்கப்படும் என அறிவித்தார்[12]. இது பல்நோக்கு குழு வாகனம் மூலம் கொண்டு சேர்க்கப்படும். 2016 அக்டோபரில் ஏவு வாகனம் ஏவப்படும். அதனை நேரடி ஒளிபரப்பாக தொலைக்கட்சியில் 365 நாளும் எல்லா வாரங்களிலும், 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படும் என அறிவித்தார்.
சாத்தியக் கூறுகள்
தொகுவாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்காவின் நாசா இதனைத் திட்டவட்டமாக மறுக்கிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழும் சூழல் உள்ளதா என்பது பற்றிய முடிவு இன்னமும் எட்டப்படாத போது இது சாத்தியமில்லை என்று நாசா கூறியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About". Mars One. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
- ↑ Staff (7 December 2016). "Mars One presents an updated mission roadmap - Amersfoort, December 7, 2016". Mars-one.com. http://www.mars-one.com/news/press-releases/mars-one-presents-an-updated-mission-roadmap.
- ↑ Nnamdi, Kojo. "One-way Mission to Mars". NPR: Science. பார்க்கப்பட்ட நாள் 25 February 2015.
- ↑ Mike Wehner (11 February 2019). "The worst Mars mission ever conceived is now dead". https://bgr.com/2019/02/11/mars-one-mission-bankrupt-cancelled/. ""மார்ஸ் ஒன் - ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளை உடைந்துள்ளது - நிரந்தர செவ்வாய் கிரக தீர்வை உருவாக்கும் நிறுவனத்தின் இலக்கில் வாக்குறுதியைக் கண்ட முதலீட்டாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை சேகரித்தது. இவை பலனளிக்கவில்லை.""
- ↑ Mars One - Technology. Mars One.
- ↑ 6.0 6.1 Mars One plans suicide mission to Red Planet for 2023. 24 June 2012. Fox News. Quote: "Lansdorp says his four-person company will coordinate the launches, but it will work with suppliers for the ship and rockets."
- ↑ 7.0 7.1 Mars One's plan to profit from the Red Planet. Prinesha Naido, Tech Central. 26 February 2018.
- ↑ "78,000 People Have Already Applied for a One-Way Trip To Mars". Business Insider.
- ↑ "Mars One Ventures AG in Liquidation". Handelsregisteramt des Kantons Basel-Stadt. Archived from the original on 25 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-02-10.
By decision of 15 January 2019, the Civil Court of the City of Basel declared the company bankrupt with effect from 15 January 2019, 3.37 p.m., thus dissolving it.
- ↑ "Mars One is dead". Engadget (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
- ↑ "About". Mars One. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
- ↑ "Road map". Mars One. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
- செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம்
- செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க இந்தியர்கள் 20,000 பேர் விண்ணப்பம் நாளிதழ்:தினமலர், நாள்: 11/09/2013
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரபூர்வதளம் பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம்