மாறாந்தை கைலாசநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மாறாந்தை ஆவுடையம்மாள் உடனுறை கயிலாயநாதர் கோயிலில் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மாறாந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கைலாசநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:திருநெல்வேலி, மாறாந்தை, ஆலங்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதசுவாமி
தாயார்:ஆவுடையம்மாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயில் அமைந்தது குறித்து இங்கு பின்வரும் கதை நிலவுகிறது. அதாவது தென்பாண்டி நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லபப் பாண்டியன் திக்விஜயம் செய்யும்போது இப்பகுதிக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அவர் வந்த நேரம் மாலை வேளை என்பதால் சிவ வழிபாட்டுக்காக அருகில் கோயில் ஏதுமுள்ளதா என்று வினவியுள்ளான். அங்கு சிவன் கோயில் எதுவுமில்லாததை அறிந்து, களிமண்ணால் லிங்கம் அமைத்து பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள மன்னன் முன்வந்தார். சிவலிங்கம் செய்வதற்காக அப்பகுதிவாசிகள் அங்கிருந்த குளத்துக்குள் மூழ்கி களிமண் எடுக்க முனைந்தபோது, அவர்களின் கரங்களில் கற்சிலை ஒன்று தட்டுப்பட, அதனையெடுத்து அரசனிடம் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து குளத்துக்குள் கிடைத்த சிவலிங்கத்தை வைத்து ஸ்ரீவல்லபன் பிரதோஷ வழிபாடு நடத்தினார். இதன்பிறகு அரண்மனை திரும்பிய அரசன் கனவில் ஈசன் தோன்றி, வழிபாடுசெய்த இடத்திலேயே கோயிலை அமைக்குமாறு கட்டளையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து திக்விஜயம் செய்த பகுதிக்கு வந்த ஸ்ரீவல்லபன் சிவாலயம் அமைத்து, குளத்துக்குள் கண்டெடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளான்.

கோயில் சிறப்பு

தொகு

சிவனும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றின் பலப்பல வடிவங்கள் என்றபோதிலும் சிவன் கோயில்களில் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிப்பது வழக்கம். ஆனால், மிக அபூர்வமாக இக்கோயிலில் தட்சிணாமூர்த்தியின் தலையில் சிவலிங்கம் வீற்றிருக்கும் விசித்திரக்கோலத்தை இக்கோயிலில் காண இயலும். இக்கோயிலில் கோமளவல்லி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளும் எழுந்தருளியுள்ளார்.[2]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில் ஆலங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாறாந்தையில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. கீழப்பாவூர் கி. ஸ்ரீ முருகன் (29 நவம்பர் 2018). "தட்சிணாமூர்த்தி சிரசில் சிவலிங்கம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2018.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)