மாறுகண் பொதுவாக இது கண்தசை கண்நோய் எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.

மாறுகண்
இரண்டு கண்களின் பார்வையையும் கண்ணில் ஒரே புள்ளியில் கொண்டு வருவதைத் தடுக்கும் மாறுகண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம், strabology
ஐ.சி.டி.-10H49. H50.
ஐ.சி.டி.-9378
ம.இ.மெ.ம185100
நோய்களின் தரவுத்தளம்29577
மெரிசின்பிளசு001004
பேசியண்ட் ஐ.இமாறுகண்
ம.பா.தD013285

மாறுகண் என்பது இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் பார்க்க இயலாத தன்மைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். ஒவ்வொரு கண் விழி அசைவும் நான்கு நேராகவும் இரண்டு சாய்ந்தும் உள்ள ஆறு தசை நார்களின் செயல்களைப் பொறுத்தே அமையும். இவற்றின் குறைகளே ஓரக் கண்பார்வையை ஏற்படுத்துகின்றன. ஏதாவது தசைநார் கண்ணை சரியாக இழுத்துப் பிடிக்காமலோ, அல்லது கருவிழியை ஒரு முனையை நோக்கி செலுத்தாமலோ இருந்தால், மாறு கண் உண்டாகிறது. குழந்தைகளின் தொலை பார்வைக் கோளாறு பல தடவைகளில் உள்புறமாக ஓரக்கண்பார்வையைத் தோற்றுவிக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தையானது அருகிலுள்ளவற்றைப் பார்க்கும் போதே இது தோன்றும்.

கிட்டப்பார்வை வெளிப்புறப் பக்கவாட்டுப் பார்வையை உண்டாக்கும். குழந்தைப் பருவ காலத்திற்குச் சில ஆண்டுகள் கழித்தே ஓரக்கண் பார்வை பக்கவாதத் தாக்கத்தால் வழக்கமாய்த் தோன்றுகிறது. காரணம் மூளையைச் சில நோய்கள் தாக்குவதால் அல்லது கண்களின் தசை நார்களின் நரம்புகளைச் சில நோய்கள் தாக்குவதால் இது ஏற்படுகிறது.

ஒரு கண் மற்ற கண்ணைக் காட்டிலும் சிறந்த பார்வை உடையதாயின், சிறந்த பார்வையுடைய கண் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்து கொண்டே செல்லத் தொடங்குகிறது. எனவே ஒருக்கணிப்புக்கண் சிகிச்சை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்கப்படவேண்டும். ஒரு கறுப்பு லென்சை சிறப்புக் கண்ணின் தனிப்பயனைத் தடை செய்யும் பொருட்டு, ஒரு பக்கத்தில் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதே வழியாகும். இவ்வணிதல், செயல் குறைந்து வரும் கண்ணை மேலும் செயலிழப்பதிலிருந்து தடுக்கும். கண்ணின் தசைநார்களை வலுப்படுத்த உதவுவதற்காகச் சரியான பார்வை சார்ந்த பயிற்சிகள் எனக் கூறப்படும் தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அப்பயிற்சியில் சரியாக இலக்கு நோக்கி உதவ ஒரு உருவத் துளையிட்ட மூக்குக் கண்ணாடியும் கொடுத்தல் உண்டு. சில நபர்களுக்கு நோயுற்ற கண்ணின் தசை நார்களைச் சரிப்படுத்த அல்லது சிறந்த கண்ணின் வலுமிகுந்த தசைநார்களின் வலுவை நெகிழச் செய்ய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படுகிறது.[1][2]

நம்பிக்கை

தொகு

பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு மாறு க‌ண் இரு‌ந்தா‌ல் அ‌தி‌ர்‌ஷ்ட‌ம் எ‌ன்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் மருத்துவரீதியில் இது ஒரு குறைபாடு.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறுகண்&oldid=3852105" இலிருந்து மீள்விக்கப்பட்டது