மாறும் சுரங்கள்

மாறும் சுவரங்கள் (விக்ருதி ஸ்வரங்கள் - விக்ருதி என்றால் மாறுவது என்று பொருள்) எனப்படுபவை இந்திய இசை மரபில் மாறுதல் அடையக்கூடிய (பேதமடையும்) சுவரங்கள் ஆகும்.இந்த சுவரங்களை அசைத்துப்பாடலாம். இந்திய இசையில் உள்ள ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு சுரங்களில் ஸ-வும் (சட்ஜம் அல்லது குரல்) என்னும் அடிப்படையான முதல் சுரமும், ப-வும் (பஞ்சமம் அல்லது இளி) என்னும் ஐந்தாவது சுரமும் மாறாச் சுவரங்கள். மீதம் உள்ள ரி, க, ம, த, நி ஆகிய ஐந்து சுரங்களும் மாறக்கூடிய சுவரங்கள். ரி என்பது ரி1, ri2 என்று வெவ்வேறு ஒலிவடிவங்கள் கொள்ளக்கூடியன. எனவே இவைகளை மாறக்கூடிய (விக்ருதி) சுவரங்கள் எனப்படும். இவ்வாறு மாறக்கூடியதாக இச்சுவரங்கள் இருப்பதால், ஒலி அலைகளில் சிறிதளவு அசைவு தந்து, அழகூட்டுமாறு இசைத்து பல்வேறு இராக உருவங்கள் உண்டாக்க வழி வகுக்கின்றன. இந்த ஐந்து மாறும் சுவரங்கள் ஒவ்வொன்றும் இரு அடிபடையான மாறுதல்களான கோமள, தீவிர மாறுதல்கள் பெறும் (கோமள, தீவிர என்பது வட இந்திய சொல் வழக்கு). இதனால் இவை கம்பித ஸ்வரங்கள் எனப்படும். செயற்கை ஸ்வரங்கள் என்றும் அழைக்கப்படும். மாறா சுரங்களாகிய ஸ , ப இயற்கைச் சுவரங்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறும்_சுரங்கள்&oldid=1397955" இலிருந்து மீள்விக்கப்பட்டது