மாறும் பெறுமான அஞ்சல் தலை

(மாறும் பெறுமான அஞ்சல்தலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாறும் பெறுமான அஞ்சல் தலை (Variable value stamp) என்பது, தன்னியக்க வங்கி இயந்திரம் போன்றதொரு இயந்திரத்தினால் வழங்கப்படுவதும் பொது வடிவமைப்புடன் கூடியதுமான பசை பூசிய அல்லது தானொட்டு அஞ்சல்தலை ஆகும். இதில், அஞ்சல்தலையின் பெறுமதி வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து வழங்கப்படும் வேளையிலேயே அச்சிடப்படுகின்றது. பெறுமதியைத் தேவைக்கேற்றபடி மாற்றிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெவ்வேறு பெறுமானங்களில் இருந்து தெரிவுசெய்யலாம். இவ்வகையான அஞ்சல்தலைகளும், இயந்திரங்களும் பொதுவாக சில்லறை வணிக, அஞ்சல் அலுவலகச் சூழல்களில் பயன்படுகின்றன.

மாறும் பெறுமதி அஞ்சல்தலை வழங்கும் இயந்திரத்தின் உட்பகுதி. பெறுமதி அச்சிடப்படாத அஞ்சல்தலைகளை உள்ளே கானலாம்.
மாறும் பெறுமதி அஞ்சல்தலைகளின் ஒரு தொகுதி. இவற்றிலிருந்து ஒரு பெறுமானத்தைத் தெரியலாம்.

வரலாறு

தொகு

பல ஆண்டுகளாக இதுபோன்ற முறைமைகள் குறித்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், நவீன, சிக்கலான கணினி அச்சுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைய முன்னர் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. வணிக நிறுவனங்களிலும் பிற அமைப்புக்களிலும் இதே போன்ற செயற்பாடுகளைச் செய்யும் அஞ்சல் முத்திரைப் பொறியின் உருவாக்கம் இந்தத் தொழில் நுட்பம் உருவாவதில் முக்கிய பங்கு வகித்தது.

மாறும் பெறுமான அஞ்சல்தலை இயந்திரம் ஒன்றுக்கான முதல் காப்புரிமை 1884 கார்ல் புசே என்பவரால் பெறப்பட்டது. 1900ல் கிறித்தியன் கார்சின் இயந்திரத்தை ஒசுலோவில் சோதித்துப்பார்த்தனர். இது போன்ற இயந்திரங்கள் விரைவிலேயே ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சோதனை செய்யப்பட்டன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Mackay, James. Stamp Collecting: Philatelic Terms Illustrated. 4th edition. London: Stanley Gibbons, 2003, p.9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85259-557-3