மாற்றுநொதி
மாற்றுநொதிகள் (Alloenzymes அல்லது allozymes) ஒரு நொதியின் மாற்றுவடிவங்களாகும். இவை ஒரே மரபிருப்பில் உள்ள வேறுபட்ட மாற்றுருக்களால் தொகுக்கப்படுகின்றன. இவை ஒத்தநொதிகளுக்கு எதிரிடையானவை. ஒத்தநொதிகள் என்பவை ஒரே செயலைச் செய்யும் நொதிகளாகும். மேலும் இவை வேறுபட்ட மரபிருப்புகளில் உள்ள மரபன்களால் தொகுக்கப்படுகின்றன.[1]
மாற்றுநொதிகள் பொதுவான உயிர்த்திணை உலகு, தனித்த உயிர்த்தொகுதிகள் சார்ந்த படிமலர்ச்சி நிலைபேணலுக்கான உயர்செயல்பாட்டு மட்டங்களில் முனைவாக உயிர்வினைகளை ஊக்குவிக்கும் இயல்பான நொதிகளே ஆகும். இந்நொதிகளை படிமலர்ச்சி வரலாற்றையும் பல்வேறு உயிரினங்களுக்கிடையே நிலவும் உறவுகளையும் சுட்டும் மூலக்கூற்று குறிபான்களாக தொகுதி மரபியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். மாற்றுநொதிகள் ஒரே கட்டமைப்பைப் பெற்றிராததால் இது முடிகிறது எனலாம். மேலும் இவற்றை நுண்புழை மின்புலப் பகுப்பால் தனியாகப் பிரிக்கவியலும். என்றாலும் சில உயிரினங்கள் ஒற்றையுருவினவாக உள்ளதால் அவற்றின் பல மாற்றுநொதிகளால் இவ்வுயிரினங்களின் படிமலர்ச்சி வரலாற்றை மதிப்பிடல் அரிதாக உள்ளது.[2] இந்நிகழ்வுகளில் அவர்கள் படிமலர்ச்சி வரலாற்றை மதிப்பிட மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.
இவை அனைத்து உயிரினங்களிலும் நிகழும் டி. என். ஏ. படிகளை உருவாக்கி, அதைப் பழுதுபார்க்கும் DNA polymerase போன்ற மிக அடிப்படையான செயல்களைப் பொதுவாக நிறைவேற்றுகின்றன. எனவே இவற்றில் ஏற்படும் கணிசமான மாற்றங்கள் உயிரினங்களின் படிமலர்ச்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றன. பொதுவாக, உயிரினத்தொகுதிகளிடையே ஏன் உயிரின உலகுகளிடையேயும் நிலவும் DNA polymeraseஇல் அமினோஅமில வரிசைமுறையில் உள்ள வேறுபாடு மிகக் குறைவாகவே அமைகிறது.
பல்வேறு உயிரினங்களின் ஒப்பீட்டிற்கு எந்த மாற்றுநொதியை தேர்வது என்பது எந்த நொதி பேரளவு வேறுபாடு கொண்டுள்ளதோ எது அனைத்து உயிரினங்களிலும் இருக்கிறதோ எனும் நிலையைப் பொறுத்தது. உயிரினங்களின் நொதிகளின் அமினோஅமில நிரலில் உள்ள வேறுபாடுகளைப் பொறுத்து கூடுதலான அமினோஅமில ஒப்புமைகள் உள்ளவை மிகநெருங்கிய உறவுள்ளனவாகவும் குறைவான ஒப்புமைகள் உள்ளவை சற்றே விலகிய உறவுள்ளனவாகவும் மதிப்பிடப்படும். நொதி குறைவான நிலைபேணல் உள்ளதாயின் நெருங்கிய உறவுள்ள உயிரினங்களிலும் அமினோஅமில வேறுபாடுகள் கூடுதலாக அமையும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Allozyme Electrophoresis and Population Structure in the Snowy Campion". Archived from the original on 17 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Parker, Patricia G. et al. (March 1998). "What Molecules Can Tell Us About Populations: Choosing and Using a Molecular Marker". Ecology 79 (2): 361–382.
- ↑ Bader, James M. "Measuring Genetic Variability in Natural Populations by Allozyme Electrophoresis" (PDF). Association for Biology Laboratory Education. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)