மாலத்தீவின் ருஃபியா
மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயம்
ருஃபியா (rufiyaa, திவெயி: ދިވެހި ރުފިޔާ) மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ 4217 குறியீடு MVR ஆகும். ருபியா 100 லாரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "ருஃபியா" என்ற சொல் இந்திச் சொல் ருப்யா (रुपया)விலிருந்து வந்துள்ளது. 10 ஏப்ரல் 2011 நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான மத்திய மாற்று வீதம் 12.85 ருபியாக்களாகும். இதிலிருந்து ±20% வரை வேறுபடலாம்; அதாவது 10.28 ருபியாக்களிலிருந்து 15.42 ருபியாக்கள் வரை.[1]
ދިވެހި ރުފިޔާ (Dhivehi) | |
---|---|
1 ருஃபியா நாணயம் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | MVR (எண்ணியல்: 462) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | Rf, MRf, MVR, .ރ or /- |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | லாரி |
வங்கித்தாள் | Rf. 5, Rf. 10, Rf. 20, Rf. 50, Rf. 100, Rf. 500 |
உலோக நாணயம் | 1 லாரி, 5 லாரி, 10 லாரி, 25 லாரி, 50 லாரி , Rf 1, Rf 2 |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | மாலைத்தீவுகள் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | மாலத்தீவு நிதிய ஆணையம் |
இணையதளம் | www.mma.gov.mv |
அச்சடிப்பவர் | டெ லா ரூ |
இணையதளம் | www.delarue.com |
காசாலை | நிதி மறும் கருவூல அமைச்சகம் |
இணையதளம் | www.finance.gov.mv |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 7.3% |
ஆதாரம் | உலகத் தரவுநூல், சூன் 2009 மதிப். |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "MMA announcement" (PDF). Archived from the original (PDF) on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.