மாலிக் இப்ராகிம் பாயு

மல்லிக் இப்ராகிம் பாயு (Malik Ibrahim Bayu) ஒரு புகழ்பெற்ற சூபி துறவியும் வீரரும் ஆவார். இவர் 14 ஆம் நூற்றாண்டில் தெற்கு பீகாருக்கு வந்து, உள்ளூர் முஸ்லிம்களை ஒடுக்கி வந்த பழங்குடி கோல் தலைவர்களை தோற்கடித்தார். இவர் ராஜா பிர்தாலை தோற்கடித்து, பீகாரின் முதல் முஸ்லிம் வெற்றியாளராகவும் ஆளுநராகவும் ஆனார். [1] மாலிக் இப்ராகிம் பாயாவின் கல்லறை பிகார் செரீப் அருகே உள்ளது. இது இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. [2]

மாலிக் இப்ராகிம் பாயு
பிகார் செரீப் அருகே அமைந்துள்ள மாலிக் இப்ராகிம் பாயுவின் கல்லறை
பிறப்புகாசுனி, ஆப்கானித்தான்
இறப்புஜனவரி 20, 1353 கி.பி. (13வது துல் ஹஜ் 753 இசுலாமிய நாட்காட்டி)
ரோதாஸ்கர், ரோத்தாஸ் மாவட்டம், பீகார்
குடும்பம்மாலிக்
தொழில்இராணுவத் தளபதி, ஆளுநர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சையத் இப்ராகிம் மல்லிக் ஒரு புகழ்பெற்ற இராணுவத் தளாபதியும் ஒரு சிறந்த சூபியும் (துறவி) ஆவார். இவர் அலியின் வழித்தோன்றல் மற்றும் அப்பாசியர்கள் இவரது முன்னோர்களை துன்புறுத்தியபோது, அவர்கள் காசுனிக்கு தப்பிச் சென்றனர்.

காசுனியில் பிறந்து வளர்ந்த இப்ராகிம் மல்லிக் தனது கல்வி மற்றும் இராணுவப் பயிற்சியைப் பெற்றார். பின்னர் சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவதற்காக தில்லிக்கு வந்தார். இவரைப்போலவே புகழ்பெற்ற பயணியும் முன்னோடி ஆய்வாளருமான இப்னு பதூதா மற்றும் அவரைப் போன்ற பிற அறிஞர்களும் சுல்தான் முகமது பின் துக்ளக்கிற்கு சேவை செய்ய உலகம் முழுவதிலுமிருந்து வந்தனர்.

சான்றுகள்

தொகு
  1. "IBRAHIM BAYA MAQBARA". bt-stage.argildx.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  2. "Alphabetical List of Monuments – Bihar « Archaeological Survey of India". asi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிக்_இப்ராகிம்_பாயு&oldid=4109386" இலிருந்து மீள்விக்கப்பட்டது