மாலிப்டினம்(IV) புரோமைடு
வேதிச் சேர்மம்
மாலிப்டினம்(IV) புரோமைடு (Molybdenum(IV) bromide) என்பது MoBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாக காணப்படும் இச்சேர்மத்தை மாலிப்டினம்(V) குளோரைடுடன் ஐதரசன் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மாலிப்டினம் டெட்ராபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
13520-59-7 | |
ChemSpider | 9103085 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139031385 |
| |
பண்புகள் | |
Br4Mo | |
வாய்ப்பாட்டு எடை | 415.57 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிற திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 2 MoCl5 + 10 HBr → 2 MoBr4 + 10 HCl + Br2
இவ்வினை நிலைப்புத்தன்மை குறைந்த மாலிப்டினம்(V) புரோமைடு உருவாகி அறை வெப்பநிலையில் புரோமினை வெளியேற்றுதல் வழியாக நடைபெறுகிறது. [1] மாலிப்டினம்(III) புரோமைடுடன் புரோமினைச் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தியும் மாலிப்டினம்(IV) புரோமைடு சேர்மத்தை தயாரிக்கலாம். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Calderazzo, Fausto; Maichle-Mössmer, Cäcilie; Pampaloni, Guido; Strähle, Joachim (1993). "Low-Temperature Syntheses of Vanadium(III) and Molybdenum(IV) Bromides by Halide Exchange". J. Chem. Soc., Dalton Trans. (5): 655–658. doi:10.1039/DT9930000655.
- ↑ Georg Brauer (Hrsg.) u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band III, Ferdinand Enke, Stuttgart 1981, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87823-0, S. 1537.