மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு

வேதிச் சேர்மம்

மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு (Molybdenum oxytetrafluoride) என்பது MoOF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தோடு டையா காந்தப்பண்பு கொண்ட திண்மமாக மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு காணப்படுகிறது. எக்சுகதிர் படிகவியல் ஆய்வின்படி, இது மாலிப்டினம் அணுக்களும் புளோரின் அணுக்களும் அடுத்தடுத்து மாறிமாறி இடம்பெற்றுள்ள நேரியல் சங்கிலியைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு பலபடியாகும். ஒவ்வொரு மாலிப்டினம் மையமும் எண்முகத்துடன் காணப்படுகின்றன. ஆக்சைடு, மூன்று விளிம்புநிலை புளோரைடுகள் மற்றும் பாலம் அமைட்த்துள்ள புளோரைடுகள் ஆகியவற்றால் ஒருங்கிணைப்பு கோளம் வரையறுக்கப்படுகிறது.[1] இந்த மையக்கருத்திற்கு மாறாக, தங்குதன் ஆக்சிடெட்ராபுளோரைடு ஒரு நாற்படியாக படிகமாக்குகிறது. இங்கு மீண்டும் புளொரைடு ஈந்தணைவிகள் பாலம் அமைக்கின்றன.[2]

மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
14459-59-7
ChEBI CHEBI:30716
Gmelin Reference
101090, 555842
InChI
  • InChI=1S/4FH.Mo.O/h4*1H;;/q;;;;+4;/p-4
    Key: YNQWRUOYFUZKDU-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Mo](F)(F)(F)F
பண்புகள்
F4MoO
வாய்ப்பாட்டு எடை 187.94 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 3.3 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடின் அசிட்டோ நைட்ரைல் கூட்டு விளைபொருளானது மாலிப்டினம் அறுபுளோரைடை அசிட்டோ நைட்ரைலிலுள்ள அறுமெத்தில் இருசிலாக்சேனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் தயாரிக்க இயலும்.:[3]

MoF6 + [(CH3)3Si]2O + CH3CN → MoOF4(NCCH3) + 2 (CH3)3SiF

மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு நீராற்பகுத்தலுக்கு உட்பட்டு மாலிப்டினம் இருபுளோரைடு ஈராக்சைடைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Edwards, A. J.; Steventon, B. R. (1968). "Fluoride crystal structures. Part II. Molybdenum oxide tetrafluoride". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 2503. doi:10.1039/j19680002503. 
  2. Turnbull, Douglas; Chaudhary, Praveen; Leenstra, Dakota; Hazendonk, Paul; Wetmore, Stacey D.; Gerken, Michael (2020). "Reactions of Molybdenum and Tungsten Oxide Tetrafluoride with Sulfur(IV) Lewis Bases: Structure and Bonding in [WOF4]4, MOF4(OSO), and [SF3][M2O2F9] (M = Mo, W)". Inorganic Chemistry 59 (23): 17544–17554. doi:10.1021/acs.inorgchem.0c02783. பப்மெட்:33200611. 
  3. Levason, William; Monzittu, Francesco M.; Reid, Gillian; Zhang, Wenjian; Hope, Eric G. (2017). "Complexes of molybdenum(VI) oxide tetrafluoride and molybdenum(VI) dioxide difluoride with neutral N- and O-donor ligands". Journal of Fluorine Chemistry 200: 190–197. doi:10.1016/j.jfluchem.2017.06.015.