மால்கம் ஆர்தர் சுமித்
மால்கம் ஆர்தர் சுமித் (Malcolm Arthur Smith)(1875 நியூ மால்டன், சர்ரேயில் - 1958 அசுகாட்டி) மலாய் தீபகற்பத்தில் பணிபுரிந்த ஈரிடவாழ்வி உயிரி அறிஞர் மற்றும் மருத்துவர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுமித் சிறு வயதிலிருந்தே ஊர்வன மற்றும் நீர்நில் வாழ்வன குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். இவர் 1898-ல் இலண்டனில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்ற பிறகு, அப்போதைய சியாம் இராச்சியத்திற்கு (இன்று தாய்லாந்து) பாங்காக்கில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு மருத்துவராகப் பணிபுரிந்தார். 1921ஆம் ஆண்டில் இவர் பாங்கோரைச் சேர்ந்த எரில் கிளின்னை மணந்தார். இவர் மருத்துவப் பயிற்சி பெற்றவர். தாய்லாந்திலிருந்து கணிசமான பெரணிகளைச் சேகரித்தார். பின்னர் ஆர்.பி.ஜி.யில் பணியாற்றினார். 1930ல் எரில் கிளின் பாங்காக் அருகே கார் விபத்தில் கொல்லப்பட்டார்.[1] இந்த தம்பதியருக்கு சிம்ரிட் "சிம்" சுமித் உட்பட மூன்று குழந்தைகள் இருந்தனர். இவர்களும் சாலை விபத்தில் கொல்லப்பட்டனர்.[1] எரில் மலையேறுபவர் மற்றும் தாவர நோயியல் நிபுணர் மேரி டிலிஸ் கிளினின் மூத்த சகோதரி ஆவார்.
பணி
தொகுசுமித், சியாமின் அரசவையில் மருத்துவராகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராகவும், மருத்துவராகவும் இருந்தார்.[2] ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வனக் குறித்த தனது அவதானிப்புகளை வெளியிட்டார். இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பவுலஞ்சருடன் வழக்கமான கடிதப் பரிமாற்றத்திலிருந்தார். இவர் 1925-ல் இலண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் தனது படிப்பைத் தொடர வெளியேறினார்.
இவர் லின்னியன் சமூகத்திலிருந்து செயல்படும் பிரித்தானிய ஹெர்பெட்டாலஜிக்கல் சொசைட்டியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.
பெருமை
தொகுமால்கம் சுமித் ஆறு வகையான ஊர்வனவற்றின் அறிவியல் பெயர்களின் மூலம் நினைவுகூரப்படுகிறார்: கேமிடாக்டைலசு மால்கோம்சுமிதி, திபாமசு சுமிதி, என்ஹைட்ரிசு சுமிதி (என்ஹைட்ரிசு ஜாகோரியின் இணைச்சொல்), பிம்ப்ரியோசு சுமிதி, திரிமெரெசுரசு மால்கோல்மி மற்றும் திப்லோபடு மால்கோல்மி.[3]
வெளியீடுகள்
தொகு- (1926) கடல் பாம்புகள்
- (1947) சியாம் நீதிமன்றத்தில் ஓர் மருத்துவர்
- (1931–1943). சிலோன் மற்றும் பர்மா உட்பட பிரித்தானிய இந்தியாவின் விலங்கினங்கள் . ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன பற்றிய 3 தொகுதிகள்.
- (1951) பிரித்தானிய நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன .
மேற்கோள்கள்
தொகு- ↑ (in en) Smith, Eryl (c. 1893-1930) on JSTOR. https://plants.jstor.org/stable/10.5555/al.ap.person.bm000325633.
- ↑ Smith MA (1947). A Physician at the Court of Siam.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Malcolm/Malcolm Smith", p. 166; "Smith, M.A.", p. 247).