மால்டேசு தேனீ

மால்டேசு தேனீ (Maltese honey bee), ஏபிசு மெலிபோரா இரட்நேரீ, மேற்கு தேனீயின் ஒரு கிளையினமாகும். இதனுடைய பூர்வீகம் மால்ட்டா தீவாகும்.

மால்டேசு தேனீ

Maltese honey bee

உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: கைமனாப்பிடிரா
குடும்பம்: ஏபிடே
பேரினம்: ஏபிசு
சிற்றினம்:
ஏபிசு மெலிபோரா
துணைச் சிற்றினம்:
ஏ. மெ. இரட்நேரீ
முச்சொற் பெயரீடு
ஏபிசு மெலிபோரா இரட்நேரீ
செப்பர்டு, அரியாசு, கிர்ச் & மெய்க்னர், 1997

தோற்றம்

தொகு

மால்டிசு தேனீ என்பது மேலைநாட்டு தேனீயின் ஒரு கிளையினமாகும். இது மால்ட்டா தீவுகளின் சுற்றுச்சூழலுக்கு இயல்பாகவும் பொருந்தக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் உள்ளது. மால்ட்டா தீவுகள் ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டபோது இது வேறுபட்ட சிற்றினமாக உருவானது. மால்ட்டா தேனீ இத்தீவிற்கு Μελίτη (மெலிடா ) என்று பெயர் வரக் காரணமாக உள்ளன. இதன் பொருள் "தேன்-இனிப்பு" என்று பொருள்.

தன்மை மற்றும் நடத்தை

தொகு

தேனீயின் நிறம் ஒப்பீட்டளவில் கருமையாக உள்ளது. இது அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட கோடை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்றது. கூட்டமைப்புகள் ஆண்டு முழுவதும் தீவுகளின் பருவங்களுக்கு ஏற்றவையாக உள்ளன. இத்தேனீக்கள் தேனடையினை நன்றாகச் சுத்தம் செய்யும் தன்மையையுடையன. போதுமான அளவில் தேனடையில் தேவையான வளங்கள் இருக்கும் போது மெய்த்திரள் ஓட்டம் நிகழ்கிறது (பொதுவாக வசந்த காலத்தில் நிகழும் இலையுதிர்காலத்தில் அதிகரிக்கும்). இது குளவிகள், எலிகள் மற்றும் வண்டுகளுக்கு எதிரான மிகவும் தற்காப்பினைக் கொண்டவை. பொதுவாக ஆக்ரோசமாக் இருக்கும் தேனீக்கள் இவை. இத்தேனீக்கள் வர்ரோவா நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளன.[1]

துணைச்சிற்றின வரலாறு

தொகு

1992இல் மால்டாவில் வர்ரோவா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த துணைச்சிற்றினம் மீண்டும் வந்தாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் பூர்வீக கூட்டமைப்புகளின் இழப்பை ஈடுசெய்ய வெளிநாட்டிலிருந்து தேனீக்களின் கூட்டமைப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன. 1997ஆம் ஆண்டில் துணைச்சிற்றினமாக அடையாளம் காணப்பட்டது இந்த தேனீக்கள், இத்தாலிய துணைச்சிற்றினங்களுடன் நன்றாக இனப்பெருக்கம் செய்கிறது. இது வர்ரோவாவுக்கு எதிராக நன்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.[சான்று தேவை] ஒரு நல்ல தேன் மகசூலைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Types of Bee". archive.org. Archived from the original on 2010-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டேசு_தேனீ&oldid=3111005" இலிருந்து மீள்விக்கப்பட்டது