மால் சந்த்
இந்திய அரசியல்வாதி
மால் சந்த் (Mal Chand) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தராகண்டம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். மால்சந்த் முன்பு உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள புரோலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து (2002, 2012ஆம் ஆண்டுகளில்) உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவி வகித்தார்.[1][2][3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்த இவர், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தராகண்டம் சட்டமன்றத் தேர்தலில், புரோலா தொகுதியில் பாஜக வேட்பாளர் துர்கேசுவர் லாலிடம் தோல்வியடைந்தார்.[4]
மால் சந்த் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-உத்தராகண்டம் | |
பதவியில் 2012–2017 | |
பின்னவர் | இராஜ்குமார் |
தொகுதி | புரோலா |
பதவியில் 2002–2007 | |
பின்னவர் | சாந்தி தேவி (எ) சாந்தி ஜுவாந்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் செயல்பாடு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | விளைவு | வாக்குகள்% | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்க்கட்சி | எதிர்க்கட்சிகள் வாக்கு சதவீதம் | மேற்கோள் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
2022 | புரோலா | இந்திய தேசிய காங்கிரசு | தோல்வி | 41.76 | துர்கேசுவர் லால் | பாரதிய ஜனதா கட்சி | 53.95 | [5] | ||
2017 | புரோலா | பாரதிய ஜனதா கட்சி | தோல்வி | 33.89 | ராஜ்குமார் | இந்திய தேசிய காங்கிரசு | 35.93 | [6] | ||
2012 | புரோலா | பாரதிய ஜனதா கட்சி | வெற்றி | 39.74 | ராஜ்குமார் | சுயேச்சை | 31.33 | [7] | ||
2007 | புரோலா | சுயேச்சை | தோல்வி | 35.92 | ராஜேஷ் உரப் ராஜேஷ் ஜுவந்தா | இந்திய தேசிய காங்கிரசு | 37.18 | [8] | ||
2002 | புரோலா | பாரதிய ஜனதா கட்சி | வெற்றி | 40.79 | சாந்தி தேவி (எ) சாந்தி ஜுவந்தா | இந்திய தேசிய காங்கிரசு | 31.62 | [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ BJP MLA accuses 6 of defaming him on FB
- ↑ My Neta
- ↑ 92 villages supported candidate may upset Cong, BJP prospects
- ↑ "Purola Assembly Constituency result". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
- ↑ "Uttarakhand State General Assembly Elections 2022 - AC-Wise Detailed Result (Form-20)". Chief Electoral Officer, Uttarakhand. Archived from the original on 15 June 2022.
- ↑ "Uttarakhand State General Assembly Elections 2017 - AC-Wise Detailed Result (Form-20)". Chief Electoral Officer, Uttarakhand. Archived from the original on 30 June 2022.
- ↑ "Uttarakhand State General Assembly Elections 2012 - AC-Wise Detailed Result (Form-20)". Chief Electoral Officer, Uttarakhand. Archived from the original on 29 September 2022.
- ↑ "Statistical Report on General Election, 2007 to the Legislative Assembly of Uttarakhand" (PDF). Election Commission of India. Archived from the original (pdf) on 14 January 2012.
- ↑ "Statistical Report on General Election, 2002 to the Legislative Assembly of Uttarakhand" (PDF). Election Commission of India. Archived from the original (pdf) on 14 January 2012.