மாளவிகா சருக்கை

மாளவிகா சருக்கை (Malavika Sarukkai) பரத நாட்டியத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு இந்திய மரபுசார் நடனக் கலைஞா் ஆவார்.[1][2][3] இவா் 2002 ஆம் ஆண்டு சங்கீத் நாடக அகாதமி விருதினை பெற்றார்.[4] 2003 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்ம சிறீ விருதை பெற்றார்.[5]

மாளவிகா சருக்கை
பிறப்பு1959
தமிழ்நாடு, இந்தியா
பணிநடனக் கலைஞர்
அறியப்படுவதுபரதநாட்டியம்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
web site

பிறப்பும், பயிற்சியும்

தொகு

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 1959 ஆம் ஆண்டு இவா் பிறந்தார்.[6] கல்யாணசுந்தரம் பிள்ளை (தஞ்சாவூர் பள்ளி) மற்றும் இராசரத்தினம் (வாசுவாகூர் பள்ளி) ஆகியோாின் கீழ் பயிற்சி பெற்றார்.[7][8][9] புகழ்பெற்ற குருஸ், கெலுசரன் மஹபத்ரா மற்றும் ரமணி ரஞ்சன் ஜெனா ஆகியோாிடம் இருந்து ஒடிசி கற்றாா்.[7][8][9] மேலும், கல்யாண நாராயணனிடமிருந்து அபிநயம் கற்றுக்கொண்டார். தனது 12ஆம் வயதில் தனது முதல் நடனத்தை மும்பையில் அரங்கேற்றினார்.[7][10]

பரத நாட்டியத்திற்கான பங்களிப்புகள்

தொகு

இவர் இந்தியாவின் பல இடங்களிலும் [11][12] மற்றும் வெளிநாடுகளில்[13][14] லிங்கன் சென்டர் ஃபார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ்[15], நியூயார்க், ஜான் எஃப். கென்னடி சென்டர் ஃபார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ்[16] மற்றும் சிகாகோவிலும்[17] தனது நடனத்தை நிகழ்த்தியுள்ளார்.[13][14] அவரது வாழ்க்கை மற்றும் பணி, இந்திய அரசாங்கத்தால் ”சமர்ப்பணம்” என்ற ஆவணப்படத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.[7][8][13] பிபிசி / விநெட் இன் ”டான்சிங்” என்ற தலைப்பில், ஒன்பது மணி நேர தொலைக்காட்சி ஆவணப்படத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.[7][8][10] கண்ணுக்குத் தெரியாத வரிசை - மாளவிகா சருக்கையின் கலை மூலம் பரதநாட்டியத்தை ஆராயும் கலை நிகழ்ச்சி (The Unseen Sequence – Exploring Bharatanatyam Through the Art of Malavika Sarukkai) மும்பையில் உள்ள தேசிய மையத்தில் திரையிடப்பட்ட மற்றொரு கலை ஆவணமாகும்.[10]

மாளவிகா சருக்கை நடன வடிவமைப்பு செய்திருக்கும் ஸதிதி கதி, கிருஷ்ணா நீ போன்றவை நியூயார்கின் ஜுலியர்ட் நிகழ்த்துக் கலைகளுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[18]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

2002 இல் இந்திய அரசாங்கத்தால் சங்கீத நாடக அகாதமி விருது மாளவிகா சருக்கைக்கு வழங்கப்பட்டது.[4][7] அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மிருணாளினி சாராபாயி விருது,[13] நிருத்யசூடாமணி பட்டம், சமஸ்கிருதி விருது மற்றும் ஹரிதாஸ் சம்மேளன விருது[2][7] மியூசிக் அகாதெமியின் கலா ஆச்சர்யா விருது போன்ற பிற விருதுகளையும் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில், பத்மசிறீ விருது பெற்றார்.[2][5][7]

மேற்கோள்

தொகு
  1. "INK Talks". INK Talks. 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  2. 2.0 2.1 2.2 "Kennedy Center". Kennedy Center. 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  3. "Walk The Talk with Malavika Sarukkai". என்டிடிவி. February 2006. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  4. 4.0 4.1 "Sangeet Natak AKademi Award". Sangeet Natak AKademi. 2015. Archived from the original on May 30, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  5. 5.0 5.1 "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  6. Vijaya Ramaswamy (2007). Historical dictionary of the Tamils. Lanham, Md. : Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810853799.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 "Indian Arts". Indian Arts. 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  8. 8.0 8.1 8.2 8.3 "Bengal Foundation". Bengal Foundation. 2015. Archived from the original on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 Malavika Sarukkai. Interview with Veejay Sai. Interview. 2015. Retrieved on February 8, 2015.
  10. 10.0 10.1 10.2 "Blouin Art Info". Blouin Art Info. 2015. Archived from the original on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Malavika Sarukkai: A tribute to Thimmakka". INKTalks. 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  12. "Padmashri Malavika Sarukkai Performs Bharatanatyam - Yaksha 2014". Isha Foundation. 21 February 2014. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  13. 13.0 13.1 13.2 13.3 "Canary Promo". Canary Promo. 2015. Archived from the original on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. 14.0 14.1 "TOI India performance". TOI. 27 June 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  15. "Huffington Post". Huffington Post. 21 December 2013. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  16. "New York Times". New York Times. 18 November 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  17. "Pulse Connects". Pulse Connects. 2015. Archived from the original on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. "மியூசிக் அகாடமி நாட்டிய விழா: நிருத்திய கலாநிதிகளும் சிலரின் நிருத்தங்களும்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா_சருக்கை&oldid=3717137" இலிருந்து மீள்விக்கப்பட்டது