மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training -DIET) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும். இந்நிறுவனம் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது.

அமைவிடம்

தொகு

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம், கோயம்புத்தூர் ஒண்டிப்புதுர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் அமைந்துள்ளது.

ஏழு கிளைகள்

தொகு
  1. பணிமுன் பயிற்சி
  2. பணியிடைப் பயிற்சி
  3. பணிஅனுபவக் கல்வி
  4. மாவட்ட வள அலகு
  5. திட்டமிடலும் மேலாண்மையும்
  6. கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கம் மதிப்பிடுதல்
  7. கல்வி நுட்பவியல்

ஏழு கிளைகளின் செயல்பாடுகள்

தொகு

பணிமுன் பயிற்சி பிரிவு

தொகு
  • ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக்கல்வியில் (பனிரெண்டாம் வகுப்பு)தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது.இவர்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர்.[1]
  • கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
  • கற்பிக்கும் முறைகளைக் கவனித்தல்.
  • உளவியல் அறிவுரை, வழிகாட்டல்.

பணியிடைப் பயிற்சி பிரிவு

தொகு
  • மாவட்டம் முழுமையிலுள்ள தொடக்கக் கல்வி,உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக்கல்வி ஆகிய நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கருத்தாளர்கள், இவர்களுக்குத் திட்டமிட்டு பணியிடைப் பயிற்சி அளித்தல்[2][3].
  • புதுமைபுனைதல், தொடர் ஆராய்ச்சிக்கு இணைப்பு மையமாகத் திகழ்தல், பருவ இதழ்கள், செய்தி மடல் வெளியிடல்.

மாவட்ட வள அலகு பிரிவு

தொகு
  • பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே மாவட்டம் முழுமைக்கும் நடைபெறும் முறைசாராக் கல்வி, மற்றும் முதியோர் கல்விக்காக திட்டமிடுதல், இணைப்பாளராக இருத்தல்.
  • ஊக்குநர், கருத்தாளர், மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பயிற்சி அளித்தல்.

திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரிவு

தொகு
  • பல்வேறு மாவட்டத் திட்டங்களுக்கு ஏற்ப புள்ளிவிவர அடிப்படையில் விவரங்களைத் திரட்டி பாதுகாத்தல்.
  • கல்வி திட்டமிடுவோர், நிர்வாகம் செய்வோர்களுக்குத் தேவையான பள்ளிச்சேர்க்கை, பள்ளியை விட்டு நின்றுவிடல், வயது வந்தோர் கல்வி, பெண் கல்வி, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர், ஊனமுற்றோர், இடையீடுகள், கல்வி நிலையங்களை மதிப்பிடுவதற்கரிய உத்திகள், போன்றவற்றுக்குத் தேவையான திட்டங்களை வழங்குதல்.
  • பள்ளி பாடங்களை உருவாக்கல், நுண்ணிலைத்திட்டமிடுதல், பள்ளி ஒருங்கிணைப்பு உருவாக்கல் போன்றவற்றில் கல்வி அதிகாரிகளுக்கு உதவி செய்தல்.

பணிப் பட்டறிவுப் பிரிவு

தொகு
  • வேலைசார் பட்டறிவுக் கல்விக்கு ஏற்ப உள்ளுர் துறைகளைத் தேர்ந்தெடுத்தல், கலைத்திட்ட அலகுகளை வளர்த்தல், கற்றல் கற்பித்தல் பொருட்கள், மலிவு விலை துணைக்கருவிகள், மதிப்பீட்டுக் கருவிகள் போன்றவற்றை ஆயத்தம் செய்தல்.
  • பயிற்சி நிறுவன எல்லைக்குள் உள்ள விடுதிகள், விளையாடும் இடம், சாலை, தோட்டம், சுற்றுப்புறத் தளவாடப் பொருட்களமாகியவற்றின் துாய்மையைப் பேணுவதற்கான செயல்களை வகுத்தல்.

கல்வி நுட்பவியல் பிரிவு

தொகு
  • பயிற்சி நிறுவனத்திற்கு மற்ற பிரிவுகளில் பணிபுரிவோர், கருத்தாளர்களின் ஒத்துழைப்புடன் எளிய, பயன்மிகு மலிவு விலை துணைக்கருவிகளைப் பல்வேறு பாடங்களுக்கும், தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்விக்கும், விளக்கப்படங்கள், படிமப்க்கள், வரைபடங்கள், பதிவுநாடா, பாடல்கள், நழுவங்கள் போன்றவற்றை ஆயத்தம் செய்தல்.
  • மலிவு விலை துணைக்கருவிகள் தயாரிப்பதற்கான பணிப்பட்டறை நடத்துதல்.
  • கல்வி தொழில்நுட்பத்தை கல்வி செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பணியிடைப்பயிற்சி நடத்துதல்.
  • நிறுவனக் காட்சி, கேள்விக் கருவிகளைப் பாதுகாத்தல்.

கலைத்திட்டம், கற்றல் பொருள் உருவாக்கம், மதிப்பிடுதல் பிரிவு

தொகு
  • உள்ளுர்ச் சூழ்நிலைக்கேற்ப தொடக்கக் கல்விக்கும், ஆசிரியர்களுக்கான திட்டங்களுக்கும், நடைமுறையில் உள்ளவற்றுக்கும் புதியவற்றைக் கண்டுபிடித்து வளர்த்தல், கலைத்திட்டத்திற்கு துணைபுரியும் துணைநுால்களை தயாரித்தல்.
  • தேர்வு வினா வங்கி, தர அளவீடு, உற்றுநோக்குதல், குறை கண்டுணரும் தேர்வு, குறை நீக்கக் கற்பித்தல், திறன்மிகு மாணவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவற்றுக்கு வழிகாட்டும் குறிப்புகளை அளித்தல் (பணிப்பட்டறை மூலம்) பணியிடைப் பயிற்சி அளித்தல்.

பணியிடங்கள்

தொகு

கல்வியாளர்கள்

தொகு
  • முதல்வர் - 1 (பொறுப்பு)
  • முதுநிலை விரிவுரையாளர் - 1
  • விரிவுரையாளர்கள் - 4

அலுவலகப் பணியாளர்கள்

தொகு
  • கண்காணிப்பாளர் - 1

மாணவ - மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை

தொகு
  • முதலாமாண்டு - 40

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
  2. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=494806&cat=504
  3. http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/sep/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2565314.html?pm=366

உசாத்துணை

தொகு

[1] [2]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
  2. ஆசிரியர் கல்வி கட்டமைப்பு. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2015. pp. 190–191.