மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்தியா

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training -DIET) என்பது இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 1986 இன் பரிந்துரைப்படி ஆசிரியர்களுக்கு பணி முன் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சியை அளிக்கவும் மேம்படுத்தவும் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும்.[1][2]

முதன்மை

தொகு

தரமான கல்வி, திறன் மிக்க ஆசிரியர்களின் தேவையும் முதன்மையையும் தேசிய கல்வி ஆணையம் (1964-66) வலியுறுத்தியது. கல்விக் கொள்கை|தேசியக் கல்விக் கொள்கை 1986, தேசிய செயல் திட்டம் 1992 ஆகியவை ஆசிரியர் கல்வியை மேம்படுத்த மாவட்ட அளவில் ஒரு நிறுவனம் ஏற்படுத்துவதன் கட்டாயத்தை வலியுறுத்தியதன் காரணமாக மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.[3]

மேலாண்மை

தொகு

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில கல்வியியல், பயிற்சி நிறுவனம் கீழ் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மேலாண்மைய்யை இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் (NCERT) ஒருங்கிணைக்கிறது.[4]

செயல்பாடுகள்

தொகு
  • இரண்டாண்டு ஆசிரியர் கல்வி பட்டய படிப்பினை நடத்துதல்
  • மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சியை அளிக்கிறது
  • மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சியினை திட்டமிடுதல் செயலாக்குதல்
  • ஆசிரியர் கல்வியில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
  • மாவட்ட அளவில் கல்விப்பணிகளை மேம்படுத்துதல்
  • கல்வி புள்ளிவிவரங்களை சேகரித்தல்

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தொடக்கம்

தொகு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவை பல்வேறு காலகட்டங்களில் [5] பின்வருமாறு தொடங்கப்பட்டுள்ளன.

தொடங்கிய ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டது மொத்தம்
1988-1989 திருவல்லிக்கேணி, கோத்தகிரி, மாயனூர், நாமக்கல், டி.கல்லுப்பட்டி, தேரூர், திரூர், திருமூர்த்தி நகர், வடலூர் 0 9
1989-1990 ஆடுதுறை, கிருஷ்ணகிரி, முனஞ்சிப்பட்டி, பாளையம்பட்டி, ராணிப்பேட்டை 0 5
1992-1993 0 காளையார்கோவில், கீழ்பெண்ணாத்தூர், மஞ்சூர், ஒட்டன்சத்திரம், பெருந்துறை, புதுக்கோட்டை, வாணரமுட்டி 7
1998-1999 0 ஜி.அரியூர், களியம்பூண்டி, கீழப்பழூர், குமுளூர், குருக்கத்தி, மன்னார்குடி, உத்தமபாளையம், உத்தமசோழபுரம் 8
2007-2008 0 தருமபுரி 1
2015-2016 0 கோயம்புத்தூர், பெரம்பலூர் 2
மொத்தம் 14 18 32

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்

தொகு
வரிசை எண் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள ஊர் மாவட்டம்
1 திருவல்லிக்கேணி சென்னை
2 கோத்தகிரி நீலகிரி
3 மாயனூர் கரூர்
4 நாமக்கல் நாமக்கல்
5 டி.கல்லுப்பட்டி மதுரை
6 தேரூர் கன்னியாகுமரி
7 திரூர் திருவள்ளூர்
8 திருமூர்த்திநகர் திருப்பூர்
9 வடலூர் கடலூர்
10 ஆடுதுறை தஞ்சாவூர்
11 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
12 முனஞ்சிப்பட்டி திருநெல்வேலி
13 பாலையம்பட்டி விருதுநகர்
14 ராணிப்பேட்டை வேலூர்
15 காளையார்கோவில் சிவகங்கை
16 கீழ்பெண்ணாத்தூர் திருவண்ணாமலை
17 மஞ்சூர் ராமநாதபுரம்
18 ஒட்டன்சத்திரம் திண்டுக்கல்
19 பெருந்துறை ஈரோடு
20 புதுக்கோட்டை புதுக்கோட்டை
21 வானரமுட்டி தூத்துக்குடி
22 ஜி.அரியூர் விழுப்புரம்
23 களியம்பூண்டி காஞ்சிபுரம்
24 கீழப்பழூர் அரியலூர்
25 குமுளுர் திருச்சி
26 குருக்கத்தி நாகபட்டினம்
27 மன்னார்குடி திருவாரூர்
28 உத்தமபாளையம் தேனி
29 உத்தமசோழபுரம் சேலம்
30 தருமபுரி தருமபுரி
31 கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
32 பெரம்பலூர் பெரம்பலூர்

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 7 துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. பிரின்ஸ் கஜேந்திர பாபு (2012-07-01). "இந்தியாவின் கல்விக் கொள்கை". நக்கீரன் பதிப்பகம். Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  3. "District Institute of Education and Training (DIET)". SCERT. p. 1. Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.