மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்தியா தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும். தேசிய கல்விக்கொள்கையின் வழிகாட்டல்களின் படி (NPE), மத்திய அரசின் நிதியுதவியுடன் கல்வித்துறையில், ஆசிரிய கல்வியின் மறுசீரமைப்பிற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டது.அவ்வகையில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டையில் 1993 ஆம் ஆண்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.[1] [2]

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுக்கோட்டை
DIET நலத்திட்டம் வழங்கிய கல்வெட்டு சான்று

அமைப்பு

தொகு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2.5 கி.மீ துாரத்தில் தஞ்சை செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஏழு கிளைகள்

தொகு
  1. பணிமுன் பயிற்சி
  2. பணியிடைப் பயிற்சி
  3. பணிஅனுபவக் கல்வி
  4. மாவட்ட வள அலகு
  5. திட்டமிடலும் மேலாண்மையும்
  6. கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கம் மதிப்பிடுதல்
  7. கல்வி நுட்பவியல்

ஏழு கிளைகளின் செயல்பாடுகள்

தொகு

பணிமுன் பயிற்சி பிரிவு

தொகு
  • ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக்கல்வியில்(பனிரெண்டாம் வகுப்பு)தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது.இவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். [3]
  • கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் மற்றும் கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
  • கற்பிக்கும் முறைகளை கவனித்தல்.
  • உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.
  • தற்போது சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலேயே பணிமுன்பயி்ற்சி பிரிவு இந்த ஆண்டு முதல் (2018)செயல்படுகிறது.

பணியிடை பயிற்சி பிரிவு

தொகு

மாவட்ட வள அலகு பிரிவு

தொகு
  • பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே மாவட்டம் முழுமைக்கும் நடைபெறும் முறைசாராக் கல்வி, மற்றும் முதியோர் கல்விக்காக திட்டமிடுதல், இணைப்பாளராக இருத்தல்.
  • ஊக்குநர், கருத்தாளர், மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பயிற்சி அளித்தல்.

திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரிவு

தொகு
  • பல்வேறு மாவட்டத் திட்டங்களுக்கு ஏற்ப புள்ளிவிவர அடிப்படையில் விவரங்களைத் திரட்டி பாதுகாத்தல்.
  • கல்வி திட்டமிடுவோர், நிர்வாகம் செய்வோர்களுக்குத் தேவையான பள்ளிச்சேர்க்கை, பள்ளியை விட்டு நின்றுவிடல், வயது வந்தோர் கல்வி, பெண்கல்வி, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர், ஊனமுற்றோர், இடையுறுகள், கல்வி நிலையங்களை மதிப்பிடுவதற்கரிய உத்திகள், போன்றவைகளுக்குத் தேவையான திட்டங்களை வழங்குதல்.
  • பள்ளி பாடங்களை உருவாக்கல், நுண்ணிலைத்திட்டமிடுதல், பள்ளி ஒருங்கிணைப்பு உருவாக்கல் போன்றவற்றில் கல்வி அதிகாரிகளுக்கு உதவி செய்தல்.

பணி அனுபவப் பிரிவு

தொகு
  • பயிற்சி நிறுவன எல்லைக்குள் உள்ள விடுதிகள், விளையாடும் இடம், சாலை, தோட்டம், சுற்றுப்புறத் தளவாடப் பொருட்கள் இவற்றின் துாய்மையைப் பேணுவதற்கான செயல்களை அமைத்தல்.

கல்வி நுட்பவியல் பிரிவு

தொகு
  • பயிற்சி நிறுவனத்திற்கு மற்ற பிரிவுகளில் பணிபுரிவோர் மற்றும் கருத்தாளர்களின் ஒத்துழைப்புடன் எளிய, பயன்மிகு மலிவு விலை துணைக்கருவிகளைப் பல்வேறு பாடங்களுக்கும், தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்விக்கும், விளக்கப்படங்கள், மாதிரிகள், வரைபடங்கள், பதிவுநாடா, பாடல்கள், நழுவங்கள் போன்றவற்றை தயார் செய்தல்.
  • மலிவு விலை துணைக்கருவிகள் தயாரிப்பதற்கான பணிப்பட்டறை நடத்துதல்.
  • கல்வி தொழில்நுட்பத்தை கல்வி செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்குப் பணியிடைப்பயிற்சி நடத்துதல்.
  • நிறுவனக் காட்சி கேள்விக் கருவிகளைப் பாதுகாத்தல்.

கலைத்திட்டம், கற்றல் பொருள் உருவாக்கம் மற்றும் மதிப்பிடுதல் பிரிவு

தொகு
  • உள்ளுர் சூழ்நிலைக்கேற்ப தொடக்கக் கல்விக்கும், ஆசிரியர்களுக்கான திட்டங்களுக்கும், நடைமுறையில் உள்ளவைகளுக்கு புதியனவைகளைக் கண்டுபிடித்து வளர்த்தல், கலைத்திட்டத்திற்கு துணைபுரியும் துணைநுால்களை தயாரித்தல்.

பணியிடங்கள்

தொகு

கல்வியாளர்கள்

தொகு
  • முதல்வர் - 1
  • முதுநிலை விரிவுரையாளர் - 7
  • விரிவுரையாளர் - 14

அலுவலகப் பணியாளர்கள்

தொகு
  • கண்காணிப்பாளர் - 1
  • உதவியாளர்கள் - 2
  • இளநிலை உதவியாளர்கள் - 4
  • சுருக்கெழுத்து தட்டச்சர் - 1
  • தட்டச்சர் - 2
  • ஆய்வக உதவியாளர் - 1
  • நுாலக உதவியாளர் - 1
  • அலுவலக உதவியாளர் - 1

மாணவ - மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை

தொகு
  • முதலாமாண்டு - 100
  • இரண்டாமாண்டு - 100

முக்கிய இடங்கள்

தொகு

அரசு மருத்துவக்கல்லுாரி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்களின் ஒளிப்படத்தொகுப்பு

தொகு
 
வனச்சரக அலுவலகம்
 
அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி
 
கல்வி செயற்கைகோள் கட்டிடம்


மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  2. ஆசிரியர் கல்வி கட்டமைப்பு. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2015. pp. 190–191.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  4. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=494806&cat=504
  5. http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/sep/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2565314.html?pm=366