மாவல் (Maval) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில், அதே பெயரில் ஒரு துணைப்பிரிவில் உள்ள ஒரு வட்டமாகும்.

மாவல்
நகரம்
மாவல் is located in மகாராட்டிரம்
மாவல்
மாவல்
மகாராட்டிராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°45′23″N 73°27′22″E / 18.756487°N 73.456206°E / 18.756487; 73.456206
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)

விளக்கம்

தொகு

மாவல் என்ற சொல்லுக்கு மராத்திய மொழியில் சூரியன் மறையும் திசை என்று பொருளாகும். இந்த பகுதி புனேவின் மேற்கே உள்ளது. இது மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. வரம்பின் மேற்கு பகுதியில் கொங்கண் பகுதியும் கிழக்குப் பகுதியில் மாவலும் அமைந்துள்ளது. பல ஆறுகள் இந்த பிராந்தியத்திலிருந்து தோன்றி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கின்றன. பரவலாகப் பார்த்தால், மாவல் 12 துணைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துணைப் பகுதியும் பெரும்பாலும் ஒரு நதியின் பெயரால் அடையாளம் காணப்படுகின்றன. அண்டார் மாவல், கனாட் மாவல் (கனத் கோர்), கோர்பார்சு மாவல், குஞ்சன் மாவல், நானே மாவல், பவன் மாவல், பாட் மாவல் (பாட் கோர்), முத்தா கோர், மியூசு கோர் (அல்லது மோசு கோர்), ரோகித் கோர், வெல்வண்ட் கோர், ஹிர்தாஸ் மாவல் போன்றவை.

இந்த பிராந்தியத்தின் மிக உயரமான இடம் மகாபலீசுவர் பகுதி, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. மாவல் உலகின் மிகவும் பல்லுயிர் பெருக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

இது பேரரசர் சத்ரபதி சிவாஜியின் முதல் தங்குமிடமாக இருந்தது. உள்ளூர் மக்கள் இராணுவத்தை 'மாவலே' என்று அழைத்தார். [1]

குறிப்புகள்

தொகு
  1. Raeside, I. (1978). A Note on the 'Twelve Mavals' of Poona District. Modern Asian Studies, 12(3), 393-417. Retrieved September 1, 2020, from http://www.jstor.org/stable/312227
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவல்&oldid=3079224" இலிருந்து மீள்விக்கப்பட்டது