வில்லுப்பாட்டு மாதவி, தமிழகத்தின் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் [1] வாழும் மாரிச்செல்வம்-மாலதி தம்பதியருக்கு பிறந்தவர் மாதவி. மாதவி பள்ளிப்பருவத்திலிருந்து விக்கிரமசிங்கபுரம் இசக்கிப் புலவர், வல்லம் மாரியம்மாள் மற்றும் கடையநல்லூர் கணபதி ஆகியோரிடம் வில்லுப்பாட்டுக் கலையை பயின்றவர். மாதவி தமது 14 வயதில் தமது சொந்த ஊரான அச்சங்குட்டம் முத்தராம்மன் கோயில் திருவிழாவின் போது வில்லுப்பாட்டை அரங்கேற்றம் செய்தார். இதனைத் தொடர்ந்து மாதவி தென் தமிழகத்தின் தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கோயில் விழாக்களில் வில்லுப்பாட்டு பாடி வருகிறார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._மாதவி&oldid=3682004" இலிருந்து மீள்விக்கப்பட்டது